சிவபெருமான் எத்தன்மையான் என நாவுக்கரசர் கூறுகிறார்?
குறுவினாக்கள்
தேவாரம்
Answers
விடை:
சிவபெருமான் எவருக்கும் அடிமையாகாத தன்மையன். ஒரு காதினில் நல்ல சங்கினாலான வெண்மையான குண்டலத்தை அணிந்தவன் என்று நாவுக்கரசர் கூறுகிறார்.
விளக்கம்:
சிவபெருமான் எத்தன்மையான் என நாவுக்கரசர் "நாமார்க்கும் குடியல்லோம்" என்று தொடங்கும் பதிகத்தில் பாடியுள்ளார். நாமார்க்கும் குடியல்லோம்' என்னும் இந்த பாடல் பாரதியாரை 'அச்சமில்லை அச்சமில்லை' எனப் பாடத் தூண்டியது.
எவருக்கும் ஆட்படாத, வெண்சங்கினைக் காதில் குழையாக அணிந்த இறைவனின் அன்றலர்ந்த மலர் போன்று செம்மையான திருவடிகளை வணங்குபவர்கள் எவருக்கும் அடிமையாக மாட்டார்; எமனுக்கும் அஞ்சமாட்டார் திருநாவுக்கரசர். நரகத்தினுள்ளும் செல்லார்; என்றும் துயர் பெறமாட்டார்; பிணி ஏதிலும் துன்பம் பட மாட்டார்; எவரிடத்திலும் பணிந்து நிற்க மாட்டார்; தன்னை சரண் அடைந்தவர்க்கு இன்பமே எந்நாளும்; துன்பமில்லை என்று பொருள் படும் விதத்தில் அமைந்துள்ளது.