திருநாவுக்கரசர் - சிறு குறிப்பு எழுதுக.
சிறுவினாக்கள்
தேவாரம்
Answers
Answered by
60
விடை:
திருநாவுக்கரசர் - இவர் திருமுனைப்பாடி நாட்டைச் சார்ந்த திருவாமூரில் பிறந்தவர்; இயற்பெயர் மருள்நீக்கியார். இவர் பெற்றோர் புகழனார், மாதினியார் ஆவர்; தமக்கையார், திலகவதியார். இவர் சமண சமயத்தில் இருந்து தன் சகோதரி திலகவதியின் மூலம் சைவ சமயத்திற்கு மாறினார்.
இவருக்கு தருமசேனர், அப்பர், வாகீசர் என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவரது நெறி தொண்டு நெறி. சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவர். இவர்தம் பாடல்கள் தேவாரம் என போற்றப்படுகிறது. இவர் தாண்டகம் பாடுவதில் வல்லவர். ஆதலால், இவர் தாண்டகவேந்தர் எனவும் வழங்கப்படுகிறார். இவரது காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு.
Similar questions