நமது கை, கால்களின் பயன்களாக இளந்திரையன் எவற்றை கூறுகிறார்?
குறுவினாக்கள்
நிற்க நேரமில்லை
Answers
விடை:
நீ செல்லும் வழியில் இடையூறாய் இருக்கும் கற்களையும் மலையினையும் கடப்பதற்கு வலிமையான இரு கால்கள் உள்ளன; தடையாய்ச் அடர்ந்து வளர்ந்திருக்கும் முட்புதர்களை அறுத்து அகற்றுவதற்கும் வலிமையான இருகரங்கள் உண்டு என்று, நமது கை, கால்களின் பயன்களை இளந்திரையனார் கூறுகிறார் .
விளக்கம்:
இவ்வாறு 'பூத்தது மானுடம்' என்னும் கவிதைத் தொகுப்பில், ‘நிற்க நேரமில்லை’ என்ற பாடல் மூலம் இளந்திரையன் ஒருவர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதனை விளக்குகிறார்.
ஆசிரியர் சாலையாரின் படைப்புக்களான 'புரட்சி முழக்கம்', 'உரை வீச்சு' ஆகிய நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசுகள் பெற்றுள்ளன.
வாழ்க்கை ஆகிய வழித்தடம் குப்பை கூளங்களால் அடைபடுமுன் நீ நேர்வழியில் துளியும் சோர்வில்லாமல் விரைந்து செல்லுதல் வேண்டும். குறிக்கோளின் இறுதி இலக்கை அடைந்து அங்கே ஓய்வெடு என்று இளைப்பாறுவது குறித்து இளந்திரையனார் கூறுகிறார்.