நிற்க நேரமில்லை - பாடல்மூலம் இளந்திரையன் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக
நெடுவினாக்கள்
நிற்க நேரமில்லை
Answers
விடை:
நேர்வழியில் செல்லுதல் :
நல் வாழ்க்கை என்னும் உன் குறிக்கோளின் வழித்தடம் பயனற்ற குப்பை கூளங்களான எண்ணங்களால் அடைக்கப்படும் முன்பே நேர்வழியில், துளியும் சோம்பல் கொள்ளாது விரைந்து செயல்படவேண்டும்.
தடைகளைத் தாண்டுதல் :
செல்லும் வழியில் இடையூறாய் அமையும் கற்களையும் மலையினையும் கடப்பதற்கு உன்னிடம் வலிமையான இரு கால்கள் உள்ளன; தடையாய்ச் செழித்து வளர்ந்திருக்கும் முட்புதர்களை அறுத்து அகற்றுவதற்கு வலிமையான இருகரங்கள் உள்ளன; செல்லும் வழியினை அறிந்து விரைந்து நடக்க இருவிழிகளும் இருகாதுகளும் உள்ளன; விண்ணினைப் பிளந்து பாதை அமைக்க வீர மனம் உண்டு. ஆகவே, கல், புதர் போன்ற தடைகளைத் தாண்டித் தொடர்ந்து செல்ல வேண்டும்.
அயற்சி கொள்ளாதிருத்தல் :
இன்று ஒருநாள் ஓய்வெடுத்துச் செல்வோம் என்று நீ தங்கிவிட்டால், அவ்வோர் இரவில் ஏதேதோ நிகழ்ந்துவிடும். ஆகவே, உன் குறிக்கோளின் இறுதி இலக்கை அடைந்து அங்கே ஓய்வெடு. அதனால் நெஞ்சினில் மகிழ்ச்சி பூக்களினைத் தோற்றுவிக்குமுன் அச்செடி தன் இலக்கிலிருந்து விலகி இளைப்பாறுவதில்லை. செடி, தன் இலக்கானப் பூக்களைத் தோற்றுவித்ததும், அதுவரை அடைந்த வேதனைகளை எல்லாம் மறந்து மலர்ச்சி கொள்ளும். அதுபோல அயற்சியின்றி உன் வெற்றி இலக்கை அடைந்தால் உன் துன்பமெல்லாம் மறைந்து இன்பம் பெருகும்.
இவ்வாறு ‘நிற்க நேரமில்லை’ பாடல் மூலம் இளந்திரையன் ஒருவர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதனை விளக்குகிறார்.