பொருள்செயல்வகை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் வளமார்ந்த கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
நெடுவினாக்கள்
திருக்குறள்
Answers
Write the power of valluwar in the form of thirrukural.
விடை:
பொருளின் சிறப்பு :
ஒரு பொருட்டாய் மதித்ததற்கு உரியர் அல்லாரை ஒரு பொருட்டாய் மதிக்கச் செய்ய வல்ல பொருளைத் தவிர வேறு சிறந்த பொருள் எதுவும் இல்லை. பொருளற்றவரை யாவரும் இகழ்வர்; செல்வரை உலகினர் யாவரும் சிறப்புச் செய்வர். பொருள் என்று எல்லாராலும் சிறப்பித்துப் பேசப்படும் அணையா விளக்கு, அதனை அடைந்தவர் நினைத்த இடங்கட்குச் சென்று பகை என்னும் இருளை அழிக்கும்.
பொருளீட்டும் நெறி :
பிறருக்குத் தீங்கின்றி அறநெறியில் ஈட்டிய பொருள், தன்னை ஈட்டியவனுக்கு அறத்தையும் இன்பத்தையும் கொடுக்கும். அரசன், தன் குடிமக்களிடம் காட்டும் அருளொடும், குடிமக்கள் தன்னிடம் செலுத்தும் அன்பொடும் பொருந்தி வராத பொருள் செல்வத்தைத் தான் அனுபவியாது கழித்து விட வேண்டும். அரசுரிமையால் வந்து சேரும் பொருள், சுங்கப்பொருள், பகைவரிடத்துத் வரியாய்க் கொள்ளும் பொருள் ஆகிய மூன்றும் அரசனுக்குரிய நன்னெறி வழிப்பட்டப் பொருள்களாகும்.
பொருளினால் வரும் பயன்கள் :
அன்பென்னும் தாயினால் பெற்றெடுக்கப்பட்ட அருள் என்னும் குழந்தை, பொருள் என்று உயர்வாய்ச் சொல்லப்படும் செல்வம் என்னும் செவிலித் தாயால் காக்கப்படும். தன் கையில் பொருள் இருக்க ஒருவன் ஒரு செயலைச் செய்தல், யானைகள் போர் புரிவதை மலைமீது ஏறி நின்று அச்சமின்றிக் காண்பது போன்றதாம். பொருளைத் தேடிச் சேர்த்திடுக. ஏனெனில், பகைவர்களின் குற்றங்களை இல்லாது அழிக்கும் படைக்கலம் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை. அறநெறியில் வரும் எளிய பொருள்களாகும்.