பெரியாரைத் துணையாகக் கொள்வது குறித்து வள்ளுவர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
நெடுவினாக்கள்
திருக்குறள்
Answers
விடை:
பெரியாரது இலக்கணம் :
பெரியார் அறத்தின் நுண்மையை, நூல்களாலும் உலகியலாலும் பயிற்சியாலும் அறிந்திருப்பார்; அறிவாலும் ஒழுக்கத்தாலும் காலத்தாலும் மேம்பட்டிருப்பார். அவர், தமக்கு ஏற்பட்ட துன்பங்களை நீக்கும் வழி அறிந்து நீக்குவர்.
பின்பு, அத்தகைய துன்பங்கள் வாரா வண்ணம் வருமுன் ஆதலால், பொருள் முதலியவற்றால் உண்டாகிய வலிமையைவிடப் பெரியாரின் துணை சிறப்புடைத்தாகும். தொழில் செய்வதற்குக் கண்ணே சிறந்த துணை. அதுபோல, நல்லாட்சி செய்வதற்குப் பெரியாரே சிறந்த துணைவர். ஆகவே, கண்போல் விளங்கும் பெரியாரை மன்னன் துணையாய்க் கொள்ள வேண்டும்.
பெரியாரைத் துணைக்கோடல் இல்லாதவிடத்து வரும் குற்றம் :
பெரியாரைத் துணையாய்க் கொள்ளாதவன், பகைவராய் இருந்து கேடு செய்வார் எவரும் இலர் எனினும், தானே தீய வழிகளில் சென்று அழிவான். முதலீடு இல்லாதவ வணிகருக்கு இலாபம் இல்லை. அதுபோல, தம்மைத் தாங்கும் பெரியார் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை. தக்க சமயத்தில் உறுதி கூறும் பெரியார் தொடர்பின்றேல் பலரை பகைத்துக் கொள்வதைவிட பன்மடங்கு பெருந்தீங்கு அடைவான்.