இயேசுவின் மழைப்பொழிவு நூலைப் படித்துக் காந்தியடிகள் உணர்ந்தது என்ன?
குறுவினாக்கள்
காந்தியம்
Answers
விடை:
‘இயேசுவின் மலைச்சொற்பொழிவு' நூலைப் படித்துக் காந்தியடிகள், தீயவனை எதிர்க்கக் கூடாது; அவனிடமுள்ள தீமையை எதிர்த்து நிற்க வேண்டும்; பகைவனிடம் அன்பு பாராட்ட வேண்டும் என்பனவற்றை உணர்ந்தார்.
விளக்கம்:
ஒருமுறை, இயேசு நாதரின் மலைச் சொற்பொழிவைப் பற்றிய நூலைப் படித்தார். தீயவனை எதிர்க்காதே. அவனிடமுள்ள தீமையை எதிர்த்து நில். பகைவனிடம் அன்பு பாராட்ட வேண்டும் போன்ற கருத்துக்கள், காந்தியடிகளிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.
மேலும் உருசிய அறிஞர் லியோ டால்ஸ்டாய் எழுதிய உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு என்னும் நூல் காந்தியடிகளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. டால்ஸ்டாய், தம் நூலில் "இன்னா செய்தார்க்கும்" என்னும் திருக்குறளையே மொழிபெயர்த்து எழுதியிருந்தார். அதனைப் படித்த காந்தியடிகள் திருக்குறள் மீதும், தமிழ் மீதும் பற்றுக் கொண்டார். அன்பு, உண்மை, உறுதி, இன்னா செய்யாமை ஆகிய உயர் பண்புகள் அவருக்கு இளம்பருவத்திலேயே இயல்பாய் அமைந்தன.