இன்னா செய்யாமை குறித்துக் காந்தியடிகள் கூறியது யாது?
சிறுவினாக்கள்
காந்தியம்
Answers
Answered by
4
விடை:
இன்னா செய்யாமை குறித்துக் காந்தியடிகள் கூறியவை:
காந்தியடிகள் அற வழி போராட்ட முறையினைத் தேர்ந்தெடுத்தார். மனிதனின் நோக்கம் உயர்ந்ததாயும் தூய்மையானதாயும் இருந்தால் மட்டும் போதாது, அதை அடையும் வழிமுறைகளும் தூய்மையானவையாய், பிறருக்குத் துன்பம் தராதனவாய் இருக்க வேண்டும் என்றார் அவர்.
ஆங்கிலேயரைத் துன்புறுத்தி விடுதலை பெறுவதைவிட, அமைதியான முறையில் அவர்களை எதிர்த்து, மனம் மாறச் செய்து விடுதலை பெறுவதே சிறந்தது என்றார். நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது; நெருப்பை நீரால்தான் அணைக்கமுடியும். வன்முறையை அன்பு, அருள் ஆகிய அறவழிகளில்தான் தடுக்க முடியும். அறவழியைப் பின்பற்றிப் பெறுகிற விடுதலையே நிலைக்கும் என்று அவர் எடுத்துக் கூறினார்.
Similar questions