வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்து மேய்ந்து தற்று - இக்குறளில் பயின்று வரும் அணி யாது?
Answers
Answer:
உவமை அணி
Explanation:
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்து மேய்ந்து தற்று - இக்குறளில் பயின்று வரும் அணி
உவமை அணி
இல்பொருள் உவமை அணி
குறள்:
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந்த தற்று.
பொருள்:
மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்.
இக்குறளில் பயின்று வரும் அணி இல்பொருள் உவமை அணியாகும்.
இல்பொருள் உவமை அணி:
இல்பொருள் உவமையணி மறைபொருளில் வரும். அதாவது இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது.
உவமானம்
ஒப்பிடக் கொண்டு வந்த பொருள்
உவமேயம்
ஒப்பிட எம்மிடமுள்ள பொருள்
உவமை உருபுகள்
உதாரணம்: போன்ற, போல, நிகர்த்த, உடைய, ஒப்ப, அன்ன, அனைய
தன் மனம் அடக்கம் இல்லாதவன் பிறர்க்கு உரிய மகளிரை விரும்புதல், பசு புலித்தோலினை போர்த்திக்கொண்டு பசு புல்லை விட்டுவிட்டு பிறர்க்கு உரிய பயிரை மேய்ந்தது போன்று, இதில் உலகில் இல்லாத செயலை உவமைப் படுத்திக் கூறியதால், இது இல்போருள் உவமை அணியாயிற்று.