India Languages, asked by StarTbia, 1 year ago

1. திருக்குறளைப் போற்றிப் பாடும் நூல் எது _________________
1. நால்வர் நான்மணிமாலை 2. திருவள்ளுவமாலை 3. இரட்டைமணிமாலை
உரிய விடையைத் தேர்த்தெழுதுக / Choose the correct answer
Chapter2 திருக்குறள் -
Page Number 9 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
10

விடை:


திருக்குறளைப் போற்றிப் பாடும் நூல் எது திருவள்ளுவமாலை


விளக்கம்:


திருவள்ளுவமாலை என்பது திருக்குறளைச் சிறப்பித்துப் பாடிய பாடல்களின் தொகுப்பு என்று பொருள்படும். மொத்தம் ஐம்பத்து மூன்று வெண்பாக்களாலான பாக்களையுடையது.

இதில், பல பாக்கள் கருத்துச் செறிவுடனும், மேற்கோளாக எடுதுக்காட்டும் அளவிலும்   உள்ளன. சில பாக்கள் குறளின் முப்பாலின் இயற்பகுப்புகளை எடுத்தோதுகின்றன; மேலும் பல பாக்கள் குறளைச் சிறப்பித்தும், குறள் ஆசிரியரைப் பாராட்டும் விதமாகவும்,  வள்ளுவரின் இதயத்தின் ஆழத்தையும், அவரது அறிவின் ஆற்றலையும் தெளிவையும் போற்றி புகழ்வதாயும் திருவள்ளுவமாலை அமைந்துள்ளது.


திருவள்ளுவமாலையின் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தியதென்பதில் ஐயம் இல்லை.
Answered by facgopi
3

Answer

Answer : (2)

Explanation:

திருவள்ளுவமாலை

Similar questions