ஒத்துழையாமை இயக்கத்தின் பல்வேறு
நிலைகளைக் கால வரிசைப்படுத்துக.
(1) அமிர்தசரஸ் நகரில் பிரிட்டிஷ் படையால்
ஆயுதம் ஏந்தாத மக்கள் மீது கொடிய தாக்குதல்
நடத்தப்பட்டது.
(2) நீதிமன்ற விசாரணை இன்றி எவரையும்
சிறையில் அடைக்க ரௌலட் சட்டம் கொண்டு
வரப்பட்டது.
(3) சௌரி சௌரா வன்முறைச் சம்பவம்
காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை
விலக்கிக் கொள்ள வழிவகுத்தது.
(4) கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில்
பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழையாமை
என்ற காந்தியடிகளின் முன்மொழிவை
ஏற்றுக் கொண்டது.
(அ) 2, 1, 4, 3 (ஆ) 1, 3, 2, 4
(இ) 2, 4, 1, 3 (ஈ) 3, 2, 4 ,1
Answers
Answered by
0
Answer:
இதற்கான விடை 2143 enpathu
Answered by
0
ஒத்துழையாமை இயக்கத்தின் பல்வேறு
நிலைகளைக் கால வரிசைப்படுத்துதல் - (அ) 2, 1, 4, 3
ரௌலட் சட்டம்
- 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரெளலட் சட்டம் கொண்டு வரப்பட்டன.
- இந்த சட்டத்தின் படி எந்தவித நீதிமன்ற விசாரணை இன்றி எவரையும் சிறையில் அடைக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
ஜாலியன் வாலாபாக் படுகொலை
- 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ல் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்ற பகுதியில் பிரிட்டிஷ் படையால் ஆயுதம் ஏந்தாத மக்கள் மீது கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது.
ஒத்துழையாமை இயக்கம்
- 1920ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழையாமை என்ற காந்தியடிகளின் முன்மொழிவை ஏற்றுக் கொண்டது.
சௌரி சௌரா வன்முறைச் சம்பவம்
- 1922ல் நடந்த சௌரி சௌரா வன்முறைச் சம்பவம் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை விலக்கிக் கொள்ள வழிவகுத்தது.
Similar questions
Economy,
5 months ago
Political Science,
5 months ago
Computer Science,
5 months ago
History,
11 months ago
History,
11 months ago
Math,
1 year ago