கீழ்க்கண்ட சேர்மங்களின் கார்பன் சங்கிலி தொடரைப் பொறுத்து
வகைப்படுத்துக மற்றும் மூலக்கூறு வாய்ப்பாடை எழுதுக.
1. புரப்பேன் 2. பென்சீன் 3. வளைய பியூட்டேன் 4. பியூரான்
Answers
Answered by
2
திறந்த அமைப்பினை உடைய நிறைவுற்ற சேர்மங்கள்
- இந்த வகையில் கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகிய இரண்டும் சங்கிலித் தொடரில் நேர்க் கோட்டு அமைப்பில் இணைந்து உள்ளது.
- அனைத்து கார்பனும் ஒற்றைப் பிணைப்பில் அமைந்த சேர்மத்திற்கு நிறைவுற்ற சேர்மம் என்று பெயர்.
- (எ.கா) புரப்பேன் ஆகும்.
கார்போ வளையச் சேர்மங்கள்
- கார்பன் அணுவினை மட்டும் உடைய வளைவுச் சேர்மங்கள் கார்போ வளையச் சேர்மங்கள் ஆகும்.
- கார்போ வளையச் சேர்மங்கள் இரு வகைப்படும்.
- அவை அலிசைக்ளிக் சேர்மங்கள் (எ.கா) வளைய பியூட்டேன் மற்றும் அரோமேட்டிக் சேர்மங்கள் (எ.கா) பென்சீன் ஆகும்.
பல்லின வளைய சேர்மங்கள்
- ஒரு வளைய சேர்ம சங்கிலித் தொடரில் கார்பன் அணுவுடன் நைட்ரஜன், ஆக்சிஜன், சல்பர் முதலிய பிற அணுக்களும் காணப்பட்டால் அவை பல்லின வளைய சேர்மங்கள் ஆகும்.
- (எ.கா) பியூரான் ஆகும்.
Similar questions