புணர்ச்சிகளை ’முதல், ஈற்றுச்’ சொல்வகையால் பொருத்துக.
1. செல்வி + ஆடினாள் - அ. மெய்யீறு + மெய்ம்முதல்
2. பாலை + திணை - ஆ. மெய்யீறு + உயிர்முதல்
3. கோல் + ஆட்டம் - இ. உயிரீறு + உயிர்முதல்
4. மண் + சரிந்தது - ஈ. உயிரீறு + மெய்ம்முதல்
Answers
Answered by
10
புணர்ச்சிகளை ’முதல், ஈற்றுச்’ சொல்வகையால் பொருத்துக;
1. செல்வி + ஆடினாள் - அ. மெய்யீறு + மெய்ம்முதல்
2. பாலை + திணை - ஆ. மெய்யீறு + உயிர்முதல்
3. கோல் + ஆட்டம் - இ. உயிரீறு + உயிர்முதல்
4. மண் + சரிந்தது - ஈ. உயிரீறு + மெய்ம்முதல்
- முதலில் நிற்கும் நிலைமொழியோடு, அதைத் தொடர்ந்து வரும் வருமொழி இணைவதைப் புணர்ச்சி என்கிறோம்.
- புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதி எழுத்தைப் பொருத்து உயிரீறு, மெய்யீறு எனவும் வருமொழியின் முதல் எழுத்தைப் பொருத்து உயிர்முதல் மெய்ம்முதல் எனவும் பிரிக்கலாம்.
1. செல்வி + ஆடினாள்
- இதில் செல்வியின் இறுதியில் உயிர் எழுத்து வருகிறது. ஆடினாளின் முதலில் உயிர் எழுத்து வருகிறது. எனவே இது உயிரீறு+உயிர்முதல் .
2. பாலை + திணை
- இதில் பாலையின் இறுதியில் உயிர் எழுத்தும், திணையின் முதலில் மெய் எழுத்தும் வருகிறது. எனவே இது உயிரீறு+மெய்முதல்.
3. கோல் + ஆட்டம்
- இதில் கோலில் இறுதியில் மெய் எழுத்தும், ஆட்டத்தின் முதலில் உயிர் எழுத்தும் வருவதால் இது மெய்யீறு+உயிர்முதல்.
4. மண் + சரிந்தது
- இதில் மண்ணின் இறுதியில் மெய் எழுத்தும் . சரிந்ததின் முதலில் மெய் எழுத்தும் வருகிறது. எனேவ இது மெய்யீறு+மெய்முதல் .
Similar questions
Sociology,
5 months ago
Physics,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
English,
1 year ago