India Languages, asked by StarTbia, 1 year ago

வள்ளலாரின் இயற்பெயர் _____________
1சம்பந்தர் 2இராமலிங்கர் 3தாயுமானவர்
உரிய விடையைத் தேர்த்தெழுதுக
திருவருட் பிரகாச வள்ளலார்

Answers

Answered by deepa70
3
✴️ விடை

➡️ 2)இராமலிங்கர்.

Answered by gayathrikrish80
1

விடை:



வள்ளலாரின் இயற்பெயர் இராமலிங்கர்



விளக்கம்:



வள்ளலார் இராமலிங்கர் என்னும் இயற்பெயரில் விளங்கினார். இராமலிங்க அடிகளார் திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்புப்பெயர் பெற்றவர். இவர் கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தார். பெற்றோர் இராமையா - சின்னம்மையார்.


ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம் ஆகிய நூல்கள் இவர் எழுதியவை. இவர் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.


சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் இவரே. இவர் அனைத்து மத நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தையும், பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும் அமைத்தவர்.அறிவுநெறி விளங்க ஞானசபையையும் நிறுவியவர். இவர் வாழ்ந்த காலம் 05.10.1823 முதல் 30.01.1874 வரை ஆகும்.


Similar questions