1. பெண் முன்னேற்றத்திற்கான அடிப்படைத் தேவைகளாக பெரியார் குறியுள்ளவற்றைத் தொகுத்தெழுதுக.
நெடுவினாக்கள் / Long answer questions
Chapter8 பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனை-
Page Number 44 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
விடை:
பெண் முன்னேற்றத்திற்கான அடிப்படைத் தேவைகளாக பெரியார் கூறும் கருத்துக்கள் :
1. பெண்கள் கல்விப் பெறுவது அவர்களது உரிமை.
2. பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படாது.
3. ஆண்கள் பெண்களைப் படிக்க வைக்க வேண்டும்.
4. உலகப் படிப்பும், ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்கப்பட வேண்டும்.
5. கணவனுக்கு மட்டும் உழைக்கும் அடிமையாக இருத்தல் கூடாது.
6. அவர்கள் சமுதாயத்திற்கு தொண்டாற்ற வேண்டும்.
7. அவர்களுக்கு சொத்துரிமை வழங்க வேண்டும்.
8. அவர்கள் அரசின் அனைத்துத் துறைகளிலும் பணியாற்ற ஆரம்பிக்கும்போது தான் நம் சமுதாயத்தில் உண்மையான புரட்சி ஏற்படும்
9. பெண்களை பகுத்தறிவு இல்லாத ஜீவன்களாக வைத்திருப்பது பெருங் கொடுமை.
விளக்கம்:
பெரியார் பெண் கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை மற்றும் அரசுப்பணி ஆகியவற்றை பெண்கள் முன்னேற்றத்திற்கான அடிப்படைத் தேவைகளாக கருதினார்.
மேலும் பெண்கள் கல்வி பெறுவது அவர்கள் உரிமை மட்டுமன்று; அவர்களின் சம உரிமை மற்றும் சொத்துரிமை சமூக மாற்றத்திற்கும் மிக இன்றியமையாததாகும். அவர்கள் உயர் கல்வி கற்று, அரசின் அனைத்துத் துறைகளிலும் பணியாற்ற ஆரம்பிக்கும் போது தான் நம் சமுதாயத்தில் உண்மையான புரட்சி ஏற்படும் என்றார் பெரியார்.