3. மணக்கொடை குறித்துப் பெரியார் கூறுவன யாவை?
சிறுவினாக்கள் / Short answer questions
Chapter8 பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனை-
Page Number 44 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
விடை:
மணக்கொடை குறித்துப் பெரியார் கூறும் கருத்துக்கள் :
1. மணக்கொடை இன்று சமுதாயத்தில் பரவியுள்ள பெருநோய்.
2. பெற்றோர் பலர், தம் பிள்ளைகளின் கல்வி செலவை முதலீடாகவே கருதுகின்றனர்.
3. வரப் போகும் மருமகளிடம் மணக்கொடையாக அதை வட்டியுடன் வாங்கத் துடிக்கின்றனர்.
4. இளைஞர்கள்
இக்கொடுமையை ஒழிக்க முன் வர வேண்டும்.
விளக்கம்:
தமிழர்களிடம் இன்று பரவியுள்ள பெருநோய் மணக்கொடை என்று பெரியார் குறிப்பிடுகிறார். பெற்றோர் பலர், தம் மகனின் கல்விக்காக பணம் செலவழிப்பதனை தங்கள் கடமையை சேர்ந்தது எனக் கருதாது, அதை ஏதோ ஒரு தொழிலில் போட்ட முதலீடாகவே கருதுகின்றனர். அந்த முதலீட்டை வட்டியுடன் சேர்த்து, அவனுக்கு வரப்போகின்ற மனைவி மூலம் பெற்றுவிட வேண்டுமென்று துடிக்கின்றனர்.
சமுதாயத்தில் முறையான ஒழுக்கமும், அன்பும், தியாக உணர்ச்சியும் ஏற்பட்டால்தான், இம்மாதிரியான தீமைகளை ஒழிக்க இயலும். இளைஞர்கள் இக்கொடுமையை ஒழிக்க, முறையான விழிப்புணர்வு பெற வேண்டும்.