"1789ஆம் ஆண்டு புரட்சிக்கு நீண்ட காலத்திற்கு
முன்னதாகவே கருத்துக்களின் களத்தில் ஒரு
புரட்சி நடந்தது" – விளக்குக
Answers
Answered by
0
கருத்துக்களின் களத்தில் ஒரு புரட்சி
- 1789ஆம் ஆண்டு புரட்சிக்கு நீண்ட காலத்திற்கு முன்னதாகவே கருத்துக்களின் களத்தில் ஒரு புரட்சி நடந்தது.
- வால்டேர், ரூசோ ஆகியோரின் எழுத்துக்கள் புரட்சிக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தன.
மாண்டெஸ்கியூ
- மாண்டெஸ்கியூ சட்டங்களின் சாரம் (The Spirit of Laws) எனும் நூலில் ஓரிடத்தில் அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்படுவதை எதிர்த்தார்.
- அதிகாரங்களை சட்டம் இயற்றுதல், சட்டங்களை செயல்படுத்துதல், நீதித்துறை என பிரிக்க வேண்டுமென கூறினார்.
வால்டர்
- வால்டர் பதினான்காம் லூயியின் காலம் என்னும் நூலினை எழுதினார்.
- இதில் மதம் சார்ந்த பிரெஞ்சுக்காரர்களின் மூட நம்பிக்கைகளை எதிர்த்தார்.
ஜான் லாக்
- ஆங்கிலத் தத்துவ ஞானியான ஜான் லாக் அரசாங்கத்தின் இரு ஆய்வுக் கட்டுரைகள் எனும் நூலினை எழுதினார்.
- இதில் தெய்வீக உரிமைக் கோட்பாட்டையும் வரம்பற்ற முடியாட்சியையும் எதிர்த்தார்.
Answered by
2
Answer:
Similar questions