கூற்று: தேசியவாதத்திற்கு 1848ஆம் ஆண்டு
தனித்துவமான வெற்றிகள் கிடைத்த ஆண்டாகும்.
காரணம்: சர்வாதிகாரம் மறைந்தது போன்ற
பிம்பம் சிறிது காலத்திற்குத் தோன்றியது.
(அ) கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை
விளக்குகிறது.
(ஆ) கூற்றும், காரணமும் சரி. ஆனால் காரணம்
கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி. காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு. காரணம் சரி
Answers
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
- தேசியவாதத்திற்கு 1848ஆம் ஆண்டு தனித்துவமான வெற்றிகள் கிடைத்த ஆண்டாகும்.
- மெட்டர்னிக் என்பவர் தேசிய வாதத்தின் பெரும் எதிரியாக மற்றும் ஐரோப்பாவின் இடைத்தரகராக விளங்கினார்.
- இவர் வியன்னா நாட்டினை விட்டு மாறு வேடத்தில் வெளியே செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார்.
- ஹங்கேரி மற்றும் பொஹிமியா ஆகிய இரு நாடுகளும் தாங்களாகவே தேசிய விடுதலை அடைந்து விட்டதாக அறிவிப்பு செய்தன.
- மிலான் நாடு ஆஸ்திரியர்களை நாட்டை வெளியேறச் செய்தது.
- வெனிஸ் நாடும் விடுதலை பெற்ற குடியரசாக மாறியது.
- சார்டினியாவின் மன்னரான சார்லஸ் ஆல்பர்ட் ஆஸ்திரியா மீது போர்ப் பிரகடனம் செய்தார்.
- சர்வாதிகாரம் மறைந்தது போன்ற பிம்பம் சிறிது காலத்திற்குத் தோன்றியது.
Similar questions