1905ஆம் ஆண்டு நிகழ்ந்த வங்காளப் பிரிவினையின்போது வங்காள மக்கள் எவ்விதம் நடந்துகொண்டனர்?
Answers
Answered by
0
வங்காளப் பிரிவினை
- 1905 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் தேதி வங்கப் பிரிவினை நடைமுறைக்கு வந்தது.
- மத அடிப்படையிலான உருவான வங்கப் பிரிவினை ஆனது மக்களை ஒன்றுபடச் செய்தது.
- மித தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகள் என இரண்டாக போராட்டக் குழுக்கள் பிரிந்து கிளர்ச்சியில் ஈடுபட்டன.
- மக்கள் வேண்டுகோள்கள், செய்திப் பிரச்சுரங்கள், மனுக்கள், பொதுக் கூட்டங்கள் மூலமாக தங்களின் எதிர்ப்பினை தெரிவித்தனர்.
- மக்கள் பிரிட்டிஷ் பொருட்களை புறக்கணிப்பது என முடிவு செய்தனர்.
- 1905 அக்டோபர் 16 ஆம் தேதியான வங்க பிரிவினை நாள் துக்க நாளாக அனுசரிக்கப்பட்டது.
- ஆயிரக்கணக்கான மக்கள் கங்கை நதியில் புனித நீராடி வந்தே மாதரம் பாடலை பாடிக் கொண்டு கல்கத்தாவின் சாலைகளில் அணி வகுப்பு நடத்தினர்.
- புறக்கணிப்பும், சுதேசி இயக்கமும் இணைந்தே நடந்தது.
- சுதேசி இயக்கத்தில் மிதவாத போக்கு, தீவிர தேசியவாதம், ஆக்கபூர்வ சுதேசி மற்றும் புரட்சிகர தேசியவாதம் என நான்கு போக்குகள் இருந்தன.
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
Chemistry,
10 months ago