1920இல் நடத்தப்பட்ட அகில இந்திய தொழில் சங்க காங்கிரசின் நடவடிக்கைகளை விளக்குக.
Answers
Answered by
0
1920 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அகில இந்திய தொழில் சங்க காங்கிரசின் நடவடிக்கைகள்
- 1920 ஆம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு மும்பையில் நடந்தது.
- இந்த மாநாட்டில் சங்க பிரதிநிதிகள் பல தீர்மானங்கள் குறித்து விவாதித்தனர்.
- விவாதிக்கப்ட்ட தீர்மானங்களில் தொழிலாளர்களின் பிரச்சனைகளில் காவல் துறை தலையிடுவதிலிருந்து பாதுகாப்பு, வேலை இல்லாதவர்களுக்கென ஒரு பதிவேட்டைப் பராமரித்தல், உணவுப் பண்டங்களின் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடு, காயமடைந்தோர்க்கு ஈட்டுத் தொகை மற்றும் உடல் நலக் காப்பீடு முதலியன அடங்கும்.
- மேலும் தொழில் முதலாளிகளுக்கு சட்ட மன்றத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதை போல தொழிலாளர்களுக்கும் அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.
Similar questions