2. இடரு_ (ர/ற) மறையோரும் (றை/ரை) எ_யுறு ( றி/ ரி ) மெ_கானார் (ழு/ளு)
உரிய சொல் தேர்த்தெழுதுக / Choose the correct word
Chapter10 கம்பராமாயணம்-
Page Number 66 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
சொல்:
இடருற மறையோரும் எரியுறு மெழுகானார்
இடம் பெறும் பாடல்:
விடுநனி கடிதென்றான் மெய்உயிர் அனையானும்
முடுகினன் நெடுநாவாய் முரிதிரை நெடுநீர்வாய்க்
கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார்
இடர்உற மறையோரும் எரியுறு மெழுகானார்
விளக்கம்:
கம்ப ராமாயணத்தில் குகன் படகை செலுத்தலைப் பற்றிய, "விடுநனி கடிதென்றான் " எனத் தொடங்கும் பாடலின் கடைசி வரி இது.
விரைந்து படகினைச்
செலுத்துமாறு குகனுக்கு இராமன் கட்டளையிட்டான். உயிரின் கட்டளைக்கு உடல் செயல்படுவது
போலக் குகனும் விரைவாக படகை செலுத்தினான். மடங்கி விழும் அலைகளையுடைய
கங்கையாற்றில் இளம் அன்னம் விரைந்து செல்வதை போலப் படகு சென்றது. அவர்களின்
பிரிவால், நெருப்பில் இட்ட மெழுகு போல்
துன்பமுற்று அந்தணர்கள் மனமுருகி நின்றார்கள்.
Similar questions