India Languages, asked by StarTbia, 1 year ago

2. பெண் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளனவாகப் பெரியார் கூறுவனவற்றை எழுதுக
நெடுவினாக்கள் / Long answer questions
Chapter8 பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனை-
Page Number 44 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
1

விடை:


பெண் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளனவாக பெரியார் கூறும் கருத்துக்கள் :


1.    குழந்தைத் திருமணத்தை தவிர்த்தல் வேண்டும்.

2.    மணக்கொடை இன்று சமுதாயத்தில் பரவியுள்ள பெருநோய். பெற்றோர் பலர், தம் பிள்ளைகளின்  கல்வி செலவை முதலீடாகவே கருதுகின்றனர். வரப்போகும் மருமகளிடம் மணக்கொடையாக அதை வட்டியுடன் வாங்கத் துடிக்கின்றனர்.

3.    இளைஞர்கள் மணக்கொடையை ஒழிக்க, முறையான விழிப்புணர்வு பெற்று முன் வர வேண்டும்.

4.    கைம்மை வாழ்வு ஒழிய, கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும்.

5.    ஒழுக்கமும் கற்பும் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஆண், பெண் இருபாலர்க்கும் பொதுவாகும் என்றார்.


விளக்கம்:


குழந்தைத் திருமணம், மணக் கொடை என்று அழைக்கப்படும் வரதட்சிணை, கைம்மை வாழ்வு அதாவது சமூகத்தில் ஆதரவற்ற இளம் விதவைகளின் வாழ்வுநிலை ஆகியன அகற்றப்பட வேண்டியவை என்பது பெரியாரின் முழக்கமாக இருந்தது.


சமுதாயத்தில் முறையான ஒழுக்கமும், அன்பும், தியாக உணர்ச்சியும் ஏற்பட்டால்தான், இம்மாதிரியான தீமைகளை ஒழிக்க இயலும்.


பெரியார் சமூக முரண்களை எதிர்த்தவர், மூடக்கருத்துக்களை முட்டறுத்தவர். அவரின் வழிகாட்டுதலால், இத்தடைகளை தகர்த்து தமிழகம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது.



Similar questions