2. கணிமேதாவியர் - குறிப்பு எழுதுக
சிறுவினாக்கள் / Short answer questions
Chapter3 ஏலாதி -
Page Number 12 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
6
விடை:
ஏலாதி ஆசிரியரின் பெயர் கணிமேதாவியார். இவருக்கு கணி மேதையர் என்னும் மற்றொரு பெயருமுண்டு. இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பதால் சமண சமயத்திற்கே உரிய கொல்லாமை முதலான அறக்கருத்துக்களை ஏலாதியில் வலியுறுத்தி கூறியுள்ளார். இவரின் காலம் கி பி ஐந்தாம் நூற்றாண்டு என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவர் திணைமாலை, நூற்றைம்பது போன்ற பிற நூல்களையும் இயற்றி உள்ளார்.
கணி என்பதற்கு கணிதம் (கணக்கு) என்றும் சோதிடம் என்றும் பொருள் படும். இத்துறைகளில் சிறந்து விளங்கியவர் ஆதலால் ஆர் விகுதி சேர்த்து, மரியாதை நிமித்தம் “கணிமேதாவியார்” என்றும் அழைக்கப்பட்டிருக்கலாம்.
Similar questions