3. பழியில்லா மன்னனாய் வாழ்பவனின் பண்புகளாகப் கணிமேதாவியர் குறிப்பிடுவன யாவை
சிறுவினாக்கள் / Short answer questions
Chapter3 ஏலாதி -
Page Number 12 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
பிறரிடம் பணிவு உடையவனாய் இருத்தல், ஒழுக்க நெறியில் நடத்தல், சான்றோர் அறிவுரையை விரும்பி ஏற்றல், நுட்பமான நூல்களை ஓதி உணர்ந்து அவற்றின்படி நடத்தல் ஆகியவையே பழியில்லா மன்னனாய் வாழ்பவனின் பண்புகள் என கணிமேதாவியார் குறிப்பிடுகிறார்.
விளக்கம்:
மேற்கண்ட பொருளில் அமைந்த பாடல் ஏலாதி நூலில் பாடப்பெற்றுள்ளது. அவை பின்வருமாறு:
வணங்கி, வழி ஒழுகி, மாண்டார் சொல் கொண்டு,
நுணங்கிய நூல் நோக்கி, நுழையா, இணங்கிய
பால் நோக்கி வாழ்வான் - பழி இல்லா மன்னனாய்,
நூல் நோக்கி வாழ்வான், நுனித்து.
பிறர்க்குப் பணிந்து, ஒழுக்கத்துடன் வாழ்ந்து, சான்றோர்களின் சொற்களின்படி நடந்து கொண்டு, நுண்ணிய நூல்களை படித்து, அவை சொல்லும் நெறிகளின் வண்ணம் வாழும் பழி இல்லா அரசன் நுண்ணிய நூல்கள் எல்லாம் போற்றும்படி மறு பிறவியிலும் வாழ்வான்.
Similar questions
Social Sciences,
8 months ago
Computer Science,
8 months ago
India Languages,
1 year ago
Sociology,
1 year ago
Math,
1 year ago