2. தற்போது வளர்ந்து வரும் இரண்டு தொழில்நுட்பத் துறைகள் யாவை?
குறுவினாக்கள் / Very short answer questions
36 பல்துறை வேலைவாய்ப்புகள்
235 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
விடை:
தற்போது வளர்ந்து வரும் இரு தொழில்நுட்பத் துறைகள் உயிரித் தொழில் நுட்பத்துறை, நுண்ணியல் தொழில் நுட்பத்துறை ஆகும்.
விளக்கம்:
தற்போது, உயிரித் தொழில்நுட்பத் துறை, நுண்ணியல் தொழில்நுட்பத் துறை சார்ந்த தொழிற்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உயிரித் தொழில்நுட்பம் குறித்த படிப்புகளில் உயிரி அறிவியல் (Bio Science), உயிரி வேதியியல் (Bio Chemistry), உயிரித் தொழில்நுட்பம் (Bio Technology), உயிரித் தகவல்கள் (Bio Informatics), உயிரி மருத்துவம் (Bio Medical), உயிரிப் பொறியியல் (Bio Engineering) எனும் பிரிவுகளில் இளநிலைப் பட்டப்படிப்புகளும் (B.Sc. / B.E or B.Tech), முதுநிலைப் பட்டப்படிப்புகளும் (M.Sc / M.Tech) உள்ளன. நானோ தொழில்நுட்பம் (Nano technology) அல்லது நுண்ணியல் தொழில்நுட்பம் என்பது அணு, மூலக்கூறு, மூலக்கூறு அளவில் பொருள்களைக் கையாளும் தொழிற்கலை ஆகும். இத்துறையில் பல்வேறுபட்ட பட்டப்படிப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன.