India Languages, asked by mvpuvidhan07, 7 months ago

2018 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் எழுதி 2015-ல் வெளியான சஞ்சாரம்' நாவலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. பக்கிரி என்ற பாத்திரத்தின் மூலம் நகரும் இந்த நாவல் நாதஸ்வர இசை, நாதஸ்வர இசைக் கலைஞர்களை அடிப்படையாகக் கொண்டது. பெரிதும் அவர்களது துயரம் குறித்துப் பேசுகிறது. “நாதஸ்வர இசைக் கலைஞர்களில் தஞ்சை மண்டலத்தைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர்கள் பேசப்படும் அளவுக்கு கோவில்பட்டி போன்ற கரிசல் பகுதியைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர்கள் பேசப்படவில்லை. இந்தக் கலைஞர்களின் துயரத்தை, வாழ்க்கையை இந்த நாவல் சொல்கிறது உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்கள் தங்கள் சுப நிகழ்வுகளில் நாதஸ்வர இசையை பயன்படுத்துகிறார்கள். இப்படியாக மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் இந்தக் கலைஞர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்கிறார் ராமகிருஷ்ணன். "தமிழ் இலக்கியப் பரப்பில் ஜெயகாந்தனுக்குப் பிறகு எழுத வந்தவர்களில் மிக முக்கியமான இரண்டு பேர் ஜெயமோகனும், எஸ் ராமகிருஷ்ணனும், இருவருமே எழுத்தின் மூலமாக பிரபலமடைந்தவர்கள். குறிப்பாக எஸ். ராமகிருஷ்ணன் பத்து வயதிலிருந்து எழுத்தாளராக வேண்டுமென நினைத்து புறப்பட்டவர். 1966-ல் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்த எஸ். ராமகிருஷ்ணன் , ஒரு முழுநேர எழுத்தாளர். 18 சிறுகதைத் தொகுப்புகள், சஞ்சாரம் உபபாண்டவம் உள்பட 9 நாவல்கள் 36 கட்டுரைத் தொகுப்புகள், 8 திரைப்பட நூல்கள் . குழந்தைகளுக்கென 15 புத்தகங்கள் இரண்டு வரலாற்று நூல்கள் , 3 நாடகத் தொகுப்புகள், 2 நேர்காணல் தொகுப்புகள் , மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் உள்ளிட்ட நூல்களை வெளியிட்டிருக்கிறார். விருது வழங்கப்பட்ட சஞ்சாரம் நாவலை 2015-ல் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டது. தற்போது தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

வினாக்கள்

சஞ்சாரம் நூலுக்கு கொடுக்கப்பட்ட விருது அ. ஞானபீட விருது

இ. சங்கீத நாடக அகாதெமி விருது

2. சஞ்சாராம் என்பது எவ்வகை நூல் அ. கட்டுரைத் தொகுப்பு நூல்

இ. நாவல் நூல்

சஞ்சாரம் என்னும் நூலின் ஆசிரியர் அ. எஸ். ராமகிருஷ்ணன்

இ. ஜெயமோகன்

ஆ. சாகித்ய அகாதெமி விருது #. சரஸ்வதி சம்மான் விருது

ஆ. சிறுகதைத் தொகுப்பு நூல் ஈ. நாடகத் தொகுப்பு நூல்

ஆ. ஜெயகாந்தன்

ஈ. சுஜாதா

விருது வழங்கப்பட்ட சஞ்சாரம் நாவலை 2015-ல் வெளியிட்ட பதிப்பகம்

அ. தேசாந்திரி பதிப்பகம்

இ. ஐந்திணைப் பதிப்பகம்

ஆ நர்மதா பதிப்பகம்

*. உயிர்மை பதிப்பகம்

எந்த இசைக்கலைஞர்களின் துயரத்தை சஞ்சாரம் என்னும் நூல் பேசுகிறது​

Answers

Answered by priteshm2013
1

Answer:

நாவல் நூல is the correct answer

Similar questions