India Languages, asked by StarTbia, 1 year ago

4. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாடியவர் __________
1. கவிமணி 2.பாரதியார் 3.பாரதிதாசன்
உரிய விடையைத் தேர்த்தெழுதுக / Choose the correct answer
Chapter6 சிலப்பதிகாரம்-
Page Number 37 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
6

விடை:

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாடியவர் பாரதியார்
1. கவிமணி 2.பாரதியார் 3.பாரதிதாசன்

விளக்கம்:

 

ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையானது சிலப்பதிகாரம். சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம், கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது ஆதலின், சிலப்பதிகாரமாயிற்று.


இக்காப்பியம் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்னும் முப்பெரும் காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது. சோழ நாட்டில் பிறந்து, பாண்டிய  நாட்டில் வளர்ந்து சேர நாட்டில் முடியும் சிறந்த காப்பியம் சிலப்பதிகாரம். இந்நூல் இன்பத்தை நுகர்ந்தவர்களில் மகாகவி பாரதி தலை சிறந்தவர். பாட்டுக்கொரு புலவன் பாரதியார்  நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு என்று சிலப்பதிகாரத்தின் சிறப்பை எடுத்துரைத்துள்ளார்.

Answered by velmuruganveerakkal
0

Answer:

2. பாரதியார்............

Similar questions
Math, 7 months ago