4. சென்ட்ரோமியர் மையத்தில் காணப்படுவது
____________ வகை குரோமோசோம்.
அ. டீலோ சென்ட்ரிக்
ஆ. மெட்டா சென்ட்ரிக்
இ. சப் – மெட்டா சென்ட்ரிக்
ஈ. அக்ரோ சென்ட்ரிக்
Answers
Answered by
0
மெட்டா சென்ட்ரிக்
குரோமோசோம்களின் வகைகள்
- முதன்மைச் சுருக்கம் அல்லது சென்ட்ரோமியர் அமைந்து உள்ள இடத்தினை பொறுத்து குரோமோசோம்கள் நான்கு வகையாக உள்ளது.
டீலோ சென்ட்ரிக்
- இவ்வகையில் சென்ட்ரோமியர்கள் குரோமோசோமின் ஒரு முனையில் அமைந்து உள்ளது.
- இவை கோல் வடிவ குரோமோசோம்கள் ஆகும்.
அக்ரோ சென்ட்ரிக்
- இவ்வகையில் சென்ட்ரோமியர்கள் குரோமோசோமின் ஒரு முனைக்கு அருகில் அமைந்து உள்ளது.
- இவை கோல் வடிவ குரோமோசோம்கள் ஆகும்.
சப் – மெட்டா சென்ட்ரிக்
- இவ்வகையில் சென்ட்ரோமியர்கள் குரோமோசோமின் மையத்திற்கு அருகில் அமைந்து உள்ளது.
- இவை J அல்லது L வடிவக் குரோமோசோம்கள் ஆகும்.
மெட்டா சென்ட்ரிக்
- இவ்வகையில் சென்ட்ரோமியர்கள் குரோமோசோமின் மையத்தில் அமைந்து உள்ளது.
- இவை V வடிவக் குரோமோசோம்கள் ஆகும்.
Answered by
0
Answer:
Similar questions