India Languages, asked by StarTbia, 1 year ago

4. இடைநிலையாசிரியர் பயிற்சி குறித்து எழுதுக
குறுவினாக்கள் / Very short answer questions
36 பல்துறை வேலைவாய்ப்புகள்
235 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை:

மேனிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள், இடைநிலை ஆசிரியர் கல்விப் பயிற்சியை இரண்டு ஆண்டுகள் கற்றுத் தேர்ந்து இடைநிலை ஆசிரியர் ஆகலாம்.


விளக்கம்:


தமிழ்நாட்டைப் பொருத்தவரை இடைநிலை, பட்டதாரி, தலைமையாசிரியர்களுக்கு அவரவர் நிலைக்கேற்ப கல்வித்தகுதிகள் முறையே அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அவ்வப்போது ஆசிரியர் நியமனங்கள் வேலைவாய்ப்பக பதிவு மூப்பு, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் காலிப்பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகின்றன.


இதுதவிர, இன்று பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள், அறிஞர்கள், தலைவர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் முதலானோரை திறம்பட உருவாக்கிய பெருமை வெறும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஆதாரப் பயிற்சி பெற்று ஆசிரியப் பணியாற்றிவர்களையே சாரும். 


நவீன உலக வளர்ச்சி, கால மாற்றத்திற்கேற்ப, இன்று ஒன்று முதல் ஐந்து வகுப்புகளுக்கான இடைநிலையாசிரியர் பணிக்கு மேனிலைக் கல்வி தேர்ச்சி, ஆசிரியர் பட்டயப் பயிற்சி ஆகியன அடிப்படை ஆசிரியர் கல்வித் தகுதிகளாக உள்ளன.

Similar questions