தூளாக்கப்பட்ட CaCO3; கட்டியான CaCO3 விட தீவிரமாக வினைபுரிகிறது. காரணம்
அ) அதிக புறப்பரப்பளவு ஆ) அதிக அழுத்தம்
இ) அதிக செறிவினால் ஈ) அதிக வெப்பநிலை
Answers
Answered by
12
Answer:
can't understand...!!..........
Answered by
2
அதிக புறப்பரப்பளவு
வேதிவினையின் வேகம்
- ஓரலகு நேரத்தில் ஏதாவது ஒரு வினைபடுபொருள் அல்லது வினை விளை பொருட்களின் செறிவில் ஏற்படும் மாற்றமே அந்த வேதி வினையின் வேகம் ஆகும்.
- வேதிவினையின் வேகத்தினை வினைபடுபொருட்களின் தன்மை, வெப்பநிலை, வினையூக்கி, அழுத்தம் மற்றும் வினைபடு பொருளின் புறப்பரப்பளவு முதலிய காரணிகள் பாதிக்கின்றன.
வினைபடு பொருளின் புறப்பரப்பளவு
- ஒரு வேதிவினையில் கட்டியான வினைபடு பொருளை விட, தூளாக்கப்பட்ட வினைபடு பொருட்கள் விரைவாக வினைபுரியும்.
- (எ.கா) தூளாக்கப்பட்ட கால்சியம் கார்பனேட்
ஆனது கட்டியான கால்சியம் கார்பனேட் விட விரைவாக வினைபுரிகிறது.
- அதாவது தூளாக்கப்பட்ட கால்சியம் கார்பனேட்டில் அதிக புறப்பரப்பளவு காணப்படுவதால் அது விரைவாக வினைபுரியும்.
Similar questions