திரைபடம் எடுக்க பயன்பெறும் படசுருள் செல்லுலாய்டு என்னும் பொருளால் ஆனது.
சந்திப்பிழை நீக்கி எழுதுக / Correct the sentence
திரைப்படக் கலை உருவான விதம்
Answers
விடை:
திரைப்படம் எடுக்கப் பயன்பெறும் படச்சுருள் செல்லுலாய்டு என்னும் பொருளால் ஆனது.
விளக்கம்:
சொல்லோடு விகுதியும் மற்றொரு சொல்லும் சேரும் போது ஏற்படும் மாற்றங்களைச் 'சந்தி' என்பர். வாக்கியத்தில் ஏற்படும் பொருட் குழப்பத்தை நீக்கித் தெளிவைக் காக்கச் சந்தி இலக்கணம் ஒரு இன்றியமையாத கருவி ஆகும்.
இங்கு, "எடுக்க பயன்பெறும்" என்பது "எடுக்கப் பயன்பெறும்" என்ற சந்தி சேரும் போது பொருட் குழப்பத்தை நீக்குகிறது.
மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
1. மரக்கன்று என்பதற்குப் பதிலாக மரகன்று என்று எழுதினால் பொருள் மாறுபடுகிறது. 2. பட்டு சேலை உடுத்தினாள் என்றால் பட்டு எனும் பெண் சேலை உடுத்தினாள் என்று பொருள் அதே சந்தி சேர்க்கும் போது பட்டுச்சேலை உடுத்தினாள் என்று கூறும் போது பொருள் மாறுபடுகிறது.
மேலும், மொழியில் வழிவழியாகக் காக்கப்பட்ட மரபு காக்கப்படுவதற்குச் சந்தி உதவி புரிகிறது.