India Languages, asked by TransitionState, 1 year ago

Edhirkala India essay in Tamil

Answers

Answered by animesh1597
0

Answer:

ஒரு முன்னேறிய, செல்வச் செழிப்பான நாடாகக்கூடிய ஆற்றல் இந்தியாவிடம் உள்ளது. ஆனால், இந்தியாவோ 120 கோடி மக்களைக் கொண்ட ஒரு ஏழை நாடு. வெறும் ஏழைமை மட்டுமல்ல, ஏழைமைப்படுத்தப்பட்ட நாடு. நாட்டில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாதிபேர் சத்தான உணவுக்கு வழியற்றவர்கள். உலகிலேயே படிப்பறிவற்ற மக்களை அதிகபட்சமாகக் கொண்ட நாடு. மனிதவள மேம்பாடு சம்பந்தபட்ட பல அளவீடுகளில் இந்தியா மிக மோசமான நிலையில் உள்ளது.

Answered by indianlanguagehelper
1

Answer:

                                         எதிர்கால இந்தியா

இந்தியா, ஆசிய கண்டத்தில்  ஒரு தனி கண்டமாகவே கருதப்பட்டு வருகிறது. வேறெந்த நாட்டுக்கும் இல்லாத அளவிற்கு எண்ணற்ற வரலாறு இந்தியாவிற்கு உள்ளது. பல மன்னர்களால் ஆளப்பட்டது, பல சமூகங்களை கொண்டது, மதச்சார்பற்றது, பல்வேறு போர்களைக் கன்னடது. உலகிற்கு அகிம்சை எனும் மாபெரும் தீர்க்கதரிசனத்தை கற்றுக்கொடுத்திருக்கிறது.

எண்ணற்ற கடந்தகால சாதனைகள் இருந்தாலும் இந்தியாவின் எதிர்காலம் என்னமோ கேள்விக்குறியாகவே இருக்கிறது. இக்கால இந்திய பல சவால்களை எதிர்கொண்டவண்ணம் உள்ளது. மேற்கத்திய நாடுகளுடன் நட்பாக இருந்தாலும் அருகாமையிலுள்ள நாடுகளுடன் சரிவர நட்பு பாராட்டமுடியாத நிலையில் இருக்கிறது. நிலையில்லா அரசியலை அடித்தளமாய் கொண்டுள்ளது.

உலகம் வெகு வேகமாக முன்னேறிக்கொண்டு வருகிறது. அனால் இந்தியாவில் பல பகுதிகளில் வசதி படைத்தோரின் பொய் புரட்டும், மூடநம்பிக்கையும் பரப்பலும் இன்னும் மேலோங்கியே காணப்படுகிறது. சட்டங்கள் சீர்திருத்தப்பட்டாலும் கொலை கொள்ளை என பல்வேறு பிரச்சனைகள் நித்தம் அரங்கேறிக்கொண்டேதான் இருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க, மற்றொரு பக்கம் இந்தியர்கள் பல துறைகளில் சாதனைகள் படைத்தது வருகிறார்கள். அறிவியலிலும், தொழில்துறை வளர்ச்சியிலும் மென்மேலும் வளர்ச்சிகளை கண்டவண்ணம் உள்ளது. இது இப்படியே நீடித்து எதிர்கால இந்திய கடந்த கால இந்தியாவை போல் மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும் என்பதே பலரின் எண்ணமாக இருந்து வருகிறது.

பழமையை துறந்து புதுமையை வரவேற்போம். வருங்கால இந்தியாவை உலகநாடுகள் வியந்து பார்க்கும் அளவிற்கு உயர்திக் காட்டுவோம்.

Similar questions