நடிப்பாற்றல் மிக்கவரையும் நடிப்பைக் கற்றுத் தருபவரையும் _______ என அழைப்பர்
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
திரைப்படக் கலை உருவான விதம்
Answers
விடை:
நடிப்பாற்றல் மிக்கவரையும் நடிப்பைக் கற்றுத் தருபவரையும் இயக்குநர் என அழைப்பர்
விளக்கம்:
நடிப்பாற்றலை எடுத்துக்கூறிச் சில நேரங்களில் தாமே நடித்தும், காட்சிகள் அமைத்தும் படம் தொடக்கம் முதல் முடியும் வரை உழைக்கும் நுண்மாண் நுழைபுலம் உடையாரை இயக்குநர் என்பர். அவருக்கு உதவியாக துணை இயக்குநர் பணியாற்றுவார். படம் எடுத்தலை படப்பிடிப்பு என்பர்.
திரைப்படம் எடுக்க முதலில், இயக்குநர் கதையையும், கதைமாந்தரையும் தேர்வு செய்வார். பின்னர் திரைக்கதை, உரையாடல், பாடல், இசை முதலியன இறுதி செய்யப்படும். அடுத்துத் திரைப்பட நடிகர், நடிகையர், அவர்களுக்குத் துணை நடிக நடிகையர் என பலர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ஏற்ற உடைகள் வடிவமைக்கப்படும். நடிப்பாற்றலை எடுத்துக் கூறும், நடித்துக்காட்டும் திறமுள்ள இயக்குநர், துணை இயக்குநர் ஆகியோரால் திரைப்படக்காட்சி படமாக்கப்படுகிறது.