India Languages, asked by poojadhari5729, 9 months ago

GST யின் அமைப்பை எழுதுக

Answers

Answered by anjalin
4

பண்டங்கள் மற்றும் பணிகள் வரியின் அமைப்பு (GST)

மாநில பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (SGST)

  • மதிப்புக் கூட்டு வரி (VAT) அ‌ல்லது விற்பனை வரி, கொள்முதல் வரி, பொழுதுபோக்கு வரி, ஆடம்பர வரி, பரிசுச்சீட்டு வரி மற்றும் மாநில கூடுதல் கட்டணம் மற்றும் வரிகள் முத‌லியன  மாநிலத்திற்குள் ‌வி‌தி‌க்க‌ப்படு‌ம் SGST வ‌ரி ஆகு‌ம்.

மத்திய பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (CGST)  

  • மத்திய சுங்கத்தீர்வை, சேவை வரி, ஈடுசெய்வரி, கூடுதல் ஆயத்தீர்வை, கூடுதல் கட்டணம், இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி வரி முத‌லியன ம‌த்‌திய அரசா‌ல் மா‌நில‌‌த்‌தி‌ற்கு‌ள் ‌வி‌தி‌க்க‌ப்படு‌ம் CGST வ‌ரி ஆகு‌ம்.  

ஒருங்கிணைந்த பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (IGST)  

  • மா‌நில‌ங்களு‌க்கு இடையே ‌வி‌தி‌க்க‌ப்படு‌ம் IGST வ‌ரி‌யி‌ல் நான்கு முக்கிய GST விகிதங்கள் உள்ளன.
  • அவை 5%, 12%, 18% மற்றும் 28% ஆகு‌ம்.
  • இ‌ந்த வ‌ரி‌யி‌லிரு‌ந்து காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான அ‌த்‌தியாவ‌சிய ப‌ண்ட‌ங்களு‌க்கு ‌வில‌க்கு உ‌ள்ளது.
Answered by Anonymous
5

  • சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax; GST) ஒரு மறைமுக வரி, இது இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இது அரசியலமைப்பு சட்டம் 2017 (நூற்று இருபத்து இரண்டாம் திருத்தச் சட்டம்)-ஆக அறிமுகமாகிறது. இந்த ச.சே.வரியானது ஜிஎஸ்டி சபை மற்றும் அதன் தலைவர் மத்திய நிதி அமைச்சர் இந்தியா – அருண் ஜெட்லியினால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த ச.சே.வரி-யின் கீழ், சரக்கு மற்றும் சேவைகளானது பின்வரும் விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது அவை: 0%, 5%, 12%, 18%, 28% ஆகும். கடினமான விலைமதிப்பற்ற கற்கள் மீது 0.25% சிறப்பு விகிதமும் வடிவமற்ற அரைகுறைவான கற்கள் மற்றும் தங்கம் மீதும் 3% வரி விதிக்கப்பட்டுள்ளது.

  • படிமம்:The President Launching Goods and Services Tax (GST) on 1st July 2017.webmஊடகத்தை ஓடவிடு

  • இந்திய குடியரசு தலைவர் சரக்கு மற்றும் சேவை வரி(GST)யை ஜீலை 1 2017 அன்று அறிமுகம் செய்கிறார்.

  • ச.சே. வரியானது 1 ஜூலை 2017 நள்ளிரவு முதல் துவக்கப்படுகிறது. இதனை பிரதமர் மோடி மற்றும் எதிர்க் கட்சிகள் முன்னிலையில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Similar questions