பின்வரும் கூற்றுக்களைக் காண்க.
(i) 1905இல் மேற்கொள்ளப்பட்ட வங்கப்
பிரிவினை ஆங்கிலேயரின் பிரித்தாளும்
கொள்கைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
(ii) 1905இல் நடைபெற்ற கல்கத்தா மாநாட்டில்
சுரேந்திரநாத் பானர்ஜி பிரிட்டிஷ்
பொருட்களையும் நிறுவனங்களையும்
புறக்கணிக்க அழைப்பு விடுத்தார்.
(iii) 1905 ஆகஸ்ட் 7இல் கல்கத்தா நகர அரங்கில்
(Town Hall) நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி
இயக்கம் குறித்த முறையான அறிவிப்பு
வழங்கப்பட்டது.
மேற்கண்ட கூற்றுக்களில் எது/எவை
சரியானவை.
(அ) (i) மட்டும்
(ஆ) (i) மற்றும் (iii) மட்டும்
(இ) (i) மற்றும் (ii) மட்டும்
(ஈ) மேற்கண்ட அனைத்தும்
Answers
Answered by
0
Explanation:
IN which language it is? bro...
Answered by
0
சரியா தவறா
அனைத்து கூற்றுகளும் சரி.
- 1905 ஆம் ஆண்டு கர்சன் பிரபு என்பவரால் வங்க பிரிவினை அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
- இதன்படி வங்காளம் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.
- இந்த வங்கப் பிரிவினை ஆனது ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு மிகச் சிறந்த உதாரணம் ஆகும்.
- 1905 ஜூலை 17ல் நடைபெற்ற கல்கத்தா மாநாட்டில் வங்கப் பிரிவினை எதிர்ப்பினை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.
- அப்போது சுரேந்திரநாத் பானர்ஜி பிரிட்டிஷ் பொருட்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றினை புறக்கணிக்க அழைப்பு விடுத்தார்.
- 1905 ஆகஸ்ட் 7இல் கல்கத்தா நகர அரங்கில் (Town Hall) நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் குறித்த முறையான அறிவிப்பு வழங்கப்பட்டது.
Similar questions