World Languages, asked by Varikutty0512, 8 months ago

ஒரு தொடர்மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ,உருபோ இல்லாமல் அப்படியே பொருளை உணர்த்துவது? 

IF U ANSWER CORRECTLY I WILL MAKE U AS BRAINLIEST ANSWER
PLZZZ SAY CORRECT ANSWER
IF U MAKE FUN I WILL REPORT YOUR ANSWER ​

Answers

Answered by sandilya06
6

Explanation:

பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய நான்கு சொற்களையும் நாம் பயன்படுத்தும் நிலையில் அதற்குரிய பொது இலக்கணத்தைக் கூறுவது பொது இலக்கணமாகும். இவ்வகையில் ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும். சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் அல்லது தொடர் எனப்படும்.

தொடர்களைத் 1. தொகைநிலைத் தொடர் - Elliptical Expressions, 2. தொகாநிலைத் தொடர் - Unlliptical Expressions என இரண்டாகப் பகுக்கலாம்.

3.1.1 தொகைநிலைத் தொடர்

சொற்களுக்கு இடையே வேற்றுமை, வினை, உவமை, முதலியவற்றிற்கு உரிய உருபுகள் ‘தொக்கு’ வரும். (மறைந்து வரும்) அவ்வாறு வருதலைத் ‘தொகை’ என்பர் இலக்கண நூலார்.

‘தொகை’ ஆறு வகைப்படும். அவை, 1. வேற்றுமைத் தொகை 2. வினைத் தொகை 3. பண்புத் தொகை 4. உவமைத் தொகை 5. உம்மைத் தொகை 6. அன்மொழித் தொகை என்பனவாகும். இனி, ஒவ்வொன்றையும் பற்றிச் சிறிது விளக்கமாகக் காண்போம்.

3.1.1.1 வேற்றுமைத் தொகை

‘நூல் படித்தான்’ என்னும் தொடர், ‘நூலைப் படித்தான்’ என விரியும். இதில், ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது. வேற்றுமை உருபு மறைந்து வந்தால் அது வேற்றுமைத் தொகை எனப்படும். ‘ஐ’ என்பது இரண்டாம் வேற்றுமை உருபு என்று முன்னரே படித்துள்ளீர்கள். ஆதலால், இத் தொடர் இரண்டாம் வேற்றுமைத் தொகையாயிற்று.

‘தலை வணங்கினான்’ என்பது ‘தலையால் வணங்கினான்’ என விரியுமாதலின் இது மூன்றாம் வேற்றுமைத் தொகை.

‘மங்கை மகள்’ என்பது ‘மங்கைக்கு மகள்’ என விரியும். ஆதலின், இது நான்காம் வேற்றுமைத் தொகை.

‘நாடு நீங்கினான்’ என்பது ‘நாட்டின் நீங்கினான்’ என விரியும். ஆதலின் இது ஐந்தாம் வேற்றுமைத் தொகை.

‘வேலன் சட்டை’ என்பது ‘வேலனது சட்டை’ என விரியும். ஆதலின், இது, ஆறாம் வேற்றுமைத் தொகை.

‘மரக்கிளி’ என்பது ‘மரத்தின் கண் கிளி’ என விரியும் ஆதலின் இது, ஏழாம் வேற்றுமைத் தொகை.

3.1.1.2 வினைத் தொகை

‘குடி நீர்’ என்னும் தொடரைக் கவனியுங்கள். இது, குடித்த நீர், குடிக்கும் நீர், குடிக்க இருக்கின்ற நீர் என முக்காலத்திற்கும் ஏற்பப் பொருள் தரும். ஆனால், காலம் காட்டும் இடைநிலை மறைந்துள்ளது. இவ்வாறு, காலம் மறைந்து வரும் பெயரெச்சம் வினைத்தொகை எனப்படும்.

அலைகடல், பாய்புலி, உண்கலம், ஆடுகொடி, ஊறுகாய்.

3.1.1.3 பண்புத் தொகை

‘செந்தாமரை’ என்பது ‘செம்மையாகிய தாமரை’ என விரியும். இடையில், ‘மை’ என்னும் பண்புப் பெயர் விகுதியும் ‘ஆகிய’ என்னும் பண்பு உருபும் மறைந்து வந்துள்ளது. இவ்வாறு, பண்பை விளக்கும் உருபு மறைந்து (தொக்கு) வருவது பண்புத் தொகை.

வெண்ணிலவு, இன்சுவை, வட்டக்கல்

3.1.1.4 உவமைத் தொகை

‘தேன்மொழி’ என்பது ‘தேன்போன்ற மொழி’ என விரியும். இடையில், ‘போலும்’ என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது. ‘மலர்ப்பாதம்’ ‘கயல்விழி’ போல்வன மேலும் சில எடுத்துக்காட்டுகளாகும்.

3.1.1.5 உம்மைத் தொகை

‘இரவு பகல்’ என்பது ‘இரவும் பகலும்’ என விரியும். இடையில் ‘உம்’ என்னும் இடைச் சொல் மறைந்து வந்துள்ளது. ஆதலால் இது, உம்மைத் தொகை எனப்படும்.

‘கபிலபரணர்’, ‘உற்றார் உறவினர்’

Answered by kandykapil16
4

Answer:

"தொகைநிலைத்தொடர்"

Explanation:

This was the correct answer, becaz

ஒரு தொடரில் இரண்டு சொற்கள் அமைந்து அவற்றுக்கிடையில் சொல்லோ, உருபோ (தொக்காமல்) மறையாமல் நின்று பொருளை உணர்த்துவது "தொகாநிலைத்தொடர்" எனப்படும்.

Since, Here the word (இல்லாமல்) is given, So the answer should be "தொகைநிலைத்தொடர்"

Similar questions