IRNSSன் ஏதேனும் இரு சேவைகளை எழுது
Answers
Answered by
0
Explanation:
இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு (Indian Regional Navigation Satellite System (IRNSS)) அல்லது ஆங்கிலத்தில் நேவிக்(NAVIC) என்பது இந்தியப் பகுதிக்காக தற்சார்பு இடஞ்சுட்டி அமைப்பை உருவாக்கும் பொருட்டு ஏழு செயற்கைக்கோள்களை புவி ஒத்திணைவு வட்டப்பாதையில் செலுத்தும் திட்டமாகும். இந்தியப் பிராந்திய ஊடுருவும் துணைக்கோள் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் இத்திட்டத்தை செயல்படுத்து. இந்திய அரசின் முழுமையான கட்டுபாட்டின் கீழ் இத்திட்டம் நடைபெறுகிறது.
Answered by
0
இந்திய நாட்டின் IRNSS
- IRNSS ஆனது இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தினால் நிறுவப்பட்டது.
- இது ஒரு தன்னாட்சி கொண்ட செயற்கை கோள் கடற் பயண அமைப்பு ஆகும்.
- இந்தியா தன் கடற்பயணம் சார்ந்த தகவல்களுக்கு வெளி நாட்டின் சார்பு நிலையை குறைத்துக் கொள்வதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
IRNSS சேவைகள்
- பொது மக்கள், அலுவலகங்கள், ஆராய்ச்சி மற்றும் வாணிப ரீதியான பயன்பாட்டிற்கு திறன் மிகுந்த இட அமைவினை அளிப்பதற்கு IRNSS பயன்படுகிறது.
- விரைவு தகவல் சேகரிப்பில் IRNSS பெரும் பங்கு வகிக்கிறது.
- நுகர்வோர், போக்குவரத்து, அமைவிடங்களை கண்டறிதல், தானியங்கி துறைமுக இயந்திர கட்டுப்பாடு, நுட்ப வேளாண்மை, கடற்சுரங்கம், ஆளில்லா விமான அளவாய்வு, பாதுகாப்பு மற்றும் வான்பட அளவியல் போன்றவைகளுக்கு பயன்படுகிறது.
Similar questions