iruperarottu panbuthogai and panbu thogai. wgat is the difference between both
Answers
Answer:
பண்புத்தொகை என்பது பண்புப்பெயரைச் சேர்ந்து (தொகுத்து) வரும் பெயர்ச்சொல்.ஒரு பண்பைக் குறிப்பது பண்புப்பெயர். எடுத்துக்காட்டாக,
நிறத்தைக் குறிக்கும் பண்புப்பெயர்ச் சொற்கள் - செம்மை, பசுமை, வெண்மை, கருமை
வடிவத்தைக் குறிக்குஞ் சொற்கள் - வட்டம், சதுரம்.
சுவையைக் குறிக்குஞ் சொற்கள் - இனிமை, கசப்பு
குணத்தைக் குறிக்குஞ் சொற்கள் - நன்மை, தீமை
எண்ணிக்கையைக் குறிக்குஞ் சொற்கள் - ஒன்று, இரண்டு, பத்து என்று பல்வேறு வகையான பண்புப்பெயருடன் சேர்ந்து வரும் பெயர்ச்சொல் பண்புத்தொகை எனப்படும்.
இருபெயரொட்டுப் பண்புத்தொகை பண்புப் பெயர் இடம் பெறாத பண்புத் தொகை ஆகும். பண்புப் பெயர்ச் சொற்களுடன் வேறு சொற்கள் சேர்ந்து வந்து ஆகிய எனும் சொல் மறைந்து வருவது பண்புத் தொகை எனப்படும். இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பது பொதுப் பெயரோடு சிறப்புப் பெயரோ, சிறப்புப் பெயரோடு பொதுப் பெயரோ சேர்ந்தமைந்து ஒரு பொருளை உணர்த்துவதாகும். பண்புத் தொகை போல இங்கும் “ஆகிய” எனும் சொல் மறைந்து நிற்கும். சிறப்புப் பெயர்ச் சொற்கள் பண்புப் பெயர்ச் சொற்கள் ஆகாவிடினும் பண்புத் தொகை போல “ஆகிய” எனுஞ்சொல் மறைந்து நிற்றலால் இது இருபெயரொட்டுப் பண்புத் தொகை எனப்பட்டது.
Answer:
Explanation: