ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3- மெத்தில்பியூட்டன் - 1 – ஆல் இது எந்த வகைச் சேர்மம்.
அ. ஆல்டிஹைடு ஆ. கார்பாசிலிக் அமிலம்
இ. கீட்டோன் ஈ. ஆல்கஹால்
Answers
Answered by
1
ஆல்கஹால்
IUPAC பெயரிடுதலில் பின்னொட்டு
- கரிமச் சேர்மத்தின் இறுதியில் பின்னொட்டுகள் வரும்.
- பின்னொட்டுகள் முதன்மை பின்னொட்டு மற்றும் இரண்டாம் நிலை பின்னொட்டு என இரு பகுதிகளை உடையது.
- இவற்றில் முதன்மை பின்னொட்டு கார்பன் உடனான பிணைப்பினை குறிக்கிறது.
- அதாவது ஒற்றை பிணைப்பாக இருந்தால் யேன் எனவும், இரட்டை மற்றும் முப்பிணைப்புக்கு முறையே ஈன் மற்றும் ஐன் எனவும் குறிக்க வேண்டும்.
- இரண்டாம் நிலை பின்னொட்டு வினை செயல் தொகுதியினை குறிக்கிறது.
- அதாவது ஆல்கஹால் தொகுதிக்கு ஆல் எனவும், ஆல்டிஹைடுக்கு ஏல் எனவும், கீட்டோனுக்கு ஓன் எனவும், கார்பாக்சிலிக் அமிலத்திற்கு ஆயிக் அமிலம் எனவும் குறிக்க வேண்டும்.
- 3- மெத்தில் பியூட்டன் - 1 – ஆல் என்ற பெயரின் இறுதியில் ஆல் என்பது வந்திருப்பதால் இது ஆல்கஹால் தொகுதியினை சார்ந்தது.
Similar questions
English,
5 months ago
Chemistry,
5 months ago
Biology,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago
Hindi,
1 year ago