Social Sciences, asked by bangaraniket8937, 1 year ago

Kaalam pon pondrathu essay in tamil language

Answers

Answered by 2ASK2
3
essays tamil Rated 3 stars, based on 19customer reviews From $8.54 per pageAvailable! Order now!

The certificate courses in tamil aim at providing the tamil language skills envisaged in the text those who get 80% and above will be declared to have. Division or social service essay for uncle and vectors. English to malayalam translation and transliteration tool online. Phd thesis in tamil literature online essays.



Get essays done for you:Open synaptic package manager, search for language-support-ta install itLook at most relevant tamil essays for children get essays written for you websites out of million at metricskeyPopular books similar with tamil essays in tamil font are listed below:An essay writing company you can 
Answered by Gautam5678
8

Answer:

இளமை பருவம் கல்விக்குரியது. எனவே அப்பருவத்தை மாணவர்கள் வீண் செய்துவிடக் கூடாது. "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்று முன்னோர்கள் உரைத்ததை மனதில் கொண்டு கல்வி பயிலவேண்டும்.

இளமை பருவத்தில் தொலைத்த கல்வியை முதுமை பருவத்தில் தேடுவது மிகவும் கடினம். இதனால் மாணவர்கள் காலத்தின் அருமையை உணர்ந்து கல்வியை சிறப்பாகவும், விரைவாகவும், சரியான நேரத்திலும் பயில வேண்டும்.

* 'இளமையில் கல், பருவத்தே பயிர் செய்' என்கிற பழமொழியை அனைவரும் உணர வேண்டும். அந்தந்தப் பருவத்தில் அந்தந்த செயலை செய்து முடித்திட வேண்டும்.

* இன்றைய போட்டி மிகுந்த உலகில் ஒரு நொடிப்பொழுதையும் நாம் வீணடிக்கக் கூடாது. உரிய செயல்களை உரிய காலத்தில் முடித்தால் தான் அதன் பயனையும், இலக்கையும் முழுமையாக நம்மால் அடைய முடியும்.

* 'அழுது புரண்டாலும் அணைதாண்டிய வெள்ளம் மீண்டும்வராது' என்ற சொல்லுக்கேற்ப தவறவிட்ட காலமும் மீண்டும் வராது. இதனை மனதில் நிலை நிறுத்தி நேரத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

* ஒவ்வொரு நாட்டிலும், சாதனையாளராகத் திகழ்ந்தவர்கள் எல்லாம் காலத்தை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டவர்களே.

* நம் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு குறித்த காலத்தில் குறித்த வேலையை செய்து முடிக்கும் பழக்கம் கொண்டவர். அதனால் தான் அவரால் இந்தியாவை சிறந்த குடியரசு நாடாக மாற்ற முடிந்தது.

* ஓட்டப்பந்தய வீரர் ஒரு நொடியைத் தவறவிட்டாலும் பதக்கத்தை இழக்க நேரிடும். சில விநாடிகள் தானே என்றுகூட அலட்சியம் செய்யாமல் குறித்த காலத்தில் செயலில் முழுமையாக ஈடுபடவேண்டும்.

* மாணவர்கள் பொழுதுபோக்கு என்ற பெயரில் காலத்தை வீணடிப்பதை குறைத்து கொள்வது நல்லது. ஏனெனில் கடந்து போன காலத்தை அதாவது நேரத்தை விலைக்கு வாங்க முடியாது.

* நொடிப்பொழுது முதல், நிமிடம், மணி, நாள், வாரம், மாதம், வருடம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

* இத்தகைய சீரும் சிறப்புமிக்க காலம் அனைவருக்கும் பொதுவானது. பூமி சுற்றச் சுற்ற நாட்களும் நகர்ந்து கொண்டிருக்கிறது. நிற்காது சுழலும் பூமியைப் போல் நாமும் காலத்தின் அருமையை உணர்ந்து உழைத்தால், உயர்வு நிச்சயம்.!

Similar questions