naan maruthuvar aanal katturai in tamil
Answers
Hi
Here is ur answer
நான் ஒரு மருத்துவரானால்….
உலகில் பல்வேறு தொழில்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் ஏதாகிலும் ஒரு தொழிலைத் தங்கள் வாழ்க்கை இலட்சியமாக கொண்டிருப்பர். அத்தகைய கனவுகளில், அவர்கள் பலவாறாக மிதந்திருப்பர். அத்தகைய கனவு நனவாகும் போது, வாழ்வே அவர்களுக்கு வெளிச்சமாகிறது. அப்படிப்பட்ட ஒரு கனவு எனக்கும் உண்டு. நான் ஒரு மருத்துவரானால்……….
எனக்கு இத்தகைய கனவு தோன்றுவதற்கு முக்கியக் காரணமாய் இருப்பவரே என் மாமா டாக்டர் மதியழகன் தான். மிகப் பெரிய வீடு, அழகான நவீன வாகனம், சமுதாயத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு போன்றவற்றைக் காணும் போது, நானும் ஒரு மருத்துவராக வர வேண்டும் என்ற வைராக்கியம் என்னும் உறுதி பெற்றுக் கொண்டே வருகிறது.
நான் ஒரு மருத்துவரானால், முதலில் ஒரு அரசாங்க மருத்துவமனையில் பணிபுரிவேன். பல்வேறு தரப்பட்ட நோயாளிகளுடன் பழகி, அவர்களின் பிரச்சினையைக் கண்டறிவேன். அவர்களை அன்பாக விசாரித்து, நோய்க்கேற்ற மருந்து கொடுப்பேன். அவர்களிடம் நல்ல பெயரைச் சம்பாதிப்பேன். கைராசிக்கார மருத்தவர் என அனைவரும் போற்றும் வண்ணம் நடந்து கொள்வேன்.
அடுத்து, நான் சொந்தமாக ஒரு மருத்துவ மையம் திறப்பேன். அது ஒரு நிபுணத்துவ மையமாக இருக்கும். அங்குப் பலவித நோய்களுக்கும் நிபுணர்கள் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்வேன். ஏழைகளுக்கு அங்குச் சிறப்புக் கழிவில் மருத்தவ வசதிகள் கிடைக்கச் செய்வேன். மிக ஏழைகளாக இருப்பின், இலவச மருத்தவ வசதிகள் கிடைக்குமாறு பார்த்துக் கொள்வேன். என் மருத்துவ நிபுணத்துவ மையத்தில், பல சிறந்த மருத்துவர்களை வேலைக்கு அமர்த்துவேன்.
நான் ஒரு மருத்துவரானால் பள்ளிகளுக்கு இலவச மருத்தவ பரிசோதனைகளை அடிக்கடி மேற்கொள்வேன். கண், பல், தோல் இன்னும் ஏனைய பிரச்சினைகள் உள்ள மாணவர்களுக்கு இலவச மருத்தவ வசதிகள் வழங்குவேன். நான் சொந்தமாக அறவாரியம் ஒன்றை நிறுவி, இத்தகைய மாணவர்கள் இலவச மருத்தவ வசதிகள் பெறுவதை உறுதி செய்வேன்.
நான் ஒரு மருத்துவரானால், என்னை உயர்த்திய சமுதாயத்தையும் மறக்க மாட்டேன். என் அறவாரியத்தின் வழி, பள்ளிக்கூடம், கோயில் போன்றவற்றிற்கு என்னால் ஆன உதவிகளைச் செய்வேன். மேற்படிப்பை மேற்கொள்ள முடியாத ஏழை மாணவர்களுக்கு, என் அறவாரியத்தின் வழி கல்வி உபகாரச் சம்பளம் வழங்குவேன். அவர்களும் என் போல் மருத்துவர்களாகி, என் வாழ்க்கையில் உயர உதவி புரிவேன்.
மருத்துவ தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தில் என் வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்வேன். பெரிய வீடு, விலையுள்ள வாகனம் போன்ற வசதிகளைப் பெற்று சமுதாயத்திலும் மிக உயர்ந்த இடத்தைப் பெறுவேன். ‘செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்’ என்பதற்கொப்ப என் உறவினர்களுக்கும் பொருளாதார வசதிகள் ஏற்பாடு செய்வேன்.
நான் ஒரு மருத்துவரானால் என் கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வேன். என்னுடைய கனவு நிறைவேற கடுமையாக படிப்பேன். என் கனவுக்கான பாதை கல்வியே என நான் உணர்வேன். எனவே, கல்வியில் என் முழுக்கவனத்தையும் கல்வியில் செலுத்தி வருகிறேன்.
Hope it helps U