India Languages, asked by ssbuvana, 1 year ago

Technology growth demolishing agriculture essay or speech in Tamil (Tamizh)

Answers

Answered by gayathrivenket
4
தொழில்நுட்ப வளர்ச்சியினால் விவசாயத்தின் அழிவு

நீங்கள் வசிக்கும் இருப்பிடத்துக்கு அருகில் கொஞ்சம் சுற்றிப் பாருங்கள். இங்கு காண்பது என்னென்ன?
அங்குமிங்கும் பரபரக்கும் வாகனங்கள், கான்கிரீட் காடுகள், வணிகநிறுவனங்கள் இன்னும் பிற கட்டிடங்கள் என ஒரே கட்டிட மயம் தான்.
என்றாவது ஒருநாள் இப்போது நீங்கள் நின்று கொண்டிருக்கும் இடம் சில பல ஆண்டுகளுக்கு முன்பு என்னவாக இருந்திருக்கும் என யோசித்து பார்த்து இருக்கிறீர்களா?
இதுவரை யோசித்தது இல்லை என்றால் இப்போதாவது யோசித்து பாருங்கள். ஆம்! இந்த இடம் கண்டிப்பாக ஒரு விவசாய நிலமாகத்தான் இருந்திருக்கும். எனில் இதில் என்னல்லாம் விளைந்து இருக்கும் என நினைத்து பாருங்கள்.
உலகம் ஓடுகிற போக்குக்கு நாமும் ஓடித்தான் ஆக வேண்டும் என்ற ஒரு கட்டாயத்தின் பேரில் நம் வாழ்க்கை சென்று கொண்டு இருக்கின்றது. ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு செல்வதற்கு வெறும் காலால் நடந்து சென்ற மனிதனால் இப்போது சில மணிநேரங்களில் இந்த உலகத்தையே சுற்றி வந்து விட முடிகிறது. 

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகத்தான் நாம் இதுபோன்ற பல்வேறு விதமான சௌகரியங்களைப் பெற்றுள்ளோம். ஆனால அதற்கு நாம் கொடுத்த விலை என்ன தெரியுமா? 
நமது விவசாயத்தை அழித்து விட்டோம். 
சாலை வசதி வேண்டுமா - விவசாய நிலம் வேண்டும்.
ரயில் பாதை வேண்டுமா- விவசாய நிலம் வேண்டும்
மருத்துவமனை, திரை அரங்கு, அடுக்குமாடி குடியிருப்பு வேண்டுமா- விவசாய நிலம் வேண்டும்.
என நமது எல்லாவிதமான அசுர வளர்ச்சிக்கும் இந்த விவசாய நிலங்களே பலிகடா ஆயின. 
விவசாயம் வேண்டுமா- விவசாய நிலம் இல்லாமல் என்ன செய்ய முடியும்?
நமது நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளதன் காரணமாக இந்த விவசாயம் அழிவு மற்றும் நிலங்களின் அழிப்பு போன்றவை இன்னும் நம் கண்களுக்கு தெரியவில்லை. 
தவிரவும் போதுமான அளவு உணவு தானியம்  மற்றும் உணவுப்பொருட்கள் இருப்பு இருப்பதாலும் இது குறித்து யாருக்கும் எந்த ஒரு கவலையும் இன்றி இருந்து வருகிறோம். 
ஆனால் உற்பத்தி குறைவு ஏற்படும் நிலை கடந்த 4-5 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இது இன்னும் இப்படியே நீடித்தால் உணவு தேவைக்கும் கூட இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். இப்போதே விழித்துக்கொள்வோம். விளைநிலங்களை காப்போம். 



Similar questions