பின்வரும் எந்த ஒன்று புற ஊதாக்
கதிர்களிலிருந்து மனிதர்களை
பாதுகாக்கிறது?
அ) UV - A
ஆ) UV - C
இ) ஓசோன் படலம்
ஈ) மேற்சொன்ன எதுவுமில்லை
Answers
Answer:
புற ஊதாக் கதிர் (ultraviolet light) என்பது கண்களால் பார்த்து பெரும்பாலும் உணரமுடியாத மின்காந்த ஒளி அலைகள் ஆகும். சூரிய ஒளியின் நிறமாலையில் (Spectrum) கண்ணுக்குப் புலப்படுகின்ற சிவப்பு முதல் ஊதா வரையான கதிர்களின் ஒழுங்கில், ஊதாக்கதிர்களுக்கு அப்பால் இருப்பதால் இது புற ஊதாக் கதிர் எனப்படுகின்றது. புற ஊதாக்கதிர் 10 நா.மீ முதல் 400 நா.மீ வரையிலான அலைநீளத்தைக் கொண்டுள்ளது. கண்களுக்குப் புலனாகும் ஓளி அலைகளைக் காட்டிலும் இது அதிகமாகவும் எக்சு கதிர்களைக் காட்டிலும் குறைவானதாகவும் உள்ளது. சூரியனிலிருந்து வரும் ஒட்டு மொத்த ஒளியில் 10% ஒளி புற ஊதாக்கதிரினால் ஆனதாகும். மின் விற்பொறி மற்றும் பாதரச ஆவி விளக்குகள், தோல் பதனிடு விளக்குகள், நீளலை புறஊதா விளக்குகள்[1][2][3][4] போன்ற சிறப்பு விளக்குகளைப் பயன்படுத்தியும் புற ஊதாக்கதிர்களை உருவாக்கலாம். அணுக்களை அயனியாக்கும் ஆற்றல் இதன் ஒளியணுக்களுக்கு இல்லை என்பதால் ஓர் அயனியாக்கக் கதிர்வீச்சாக புற ஊதாக்கதிர் கருதப்படுவதில்லை. ஆனாலும் நீளலை புற ஊதா கதிர்வீச்சு இரசாயன வினைகளில் பங்கேற்கிறது. பல பொருட்களை ஒளிர அல்லது உடனொளிரச் செய்கிறது. இதன் விளைவாக, எளிமையான வெப்ப விளைவுகளைக் காட்டிலும் புற ஊதாக்கதிரின் உயிரியல் விளைவுகள் அதிகமானவையாக உள்ளன. மற்றும் இக் கதிர்வீச்சின் பல நடைமுறை பயன்பாடுகள் கரிம மூலக்கூறுகளுடன் கொண்ட தொடர்புகளிலிருந்து பெறப்படுகின்றன.
ஓசோன் படலம்
- தொழிற்சாலைகள் மற்றும் மோட்டார் வாகனங்கள் முதலியனவற்றினால் வெளிப்புறக் காற்று ஆனது மாசு அடைகிறது.
- மோட்டார் வாகனங்கள் கார்பன் மோனோ ஆக்சைடு வளிமண்டலத்தில் அதிகரிப்பதில் பங்களிப்பு செய்கிறது.
- மோட்டார் வாகனங்களில் இருந்து வெளியிடப்படும் கரியமில வாயு ஆனது வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன் அளவினை குறைக்கிறது.
- இதன் மூலம் காற்று மாசு அடைந்து சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது.
- சூரியனின் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து நம்மை காக்க ஓசோன் படலம் பயன்பட்டது.
- கார்பன் மோனோ ஆக்சைடு ஆனது வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தினை சிதைவடைய செய்கிறது.
- இதன் காரணமாக புவிக்கு சூரியனின் புற ஊதாக் கதிர்கள் நேரடியாக ஊடுருவும் நிலை ஏற்பட்டு உள்ளது.