India Languages, asked by chuadharyrishi7075, 11 months ago

World best essay desiya orumaipadu in Tamil language

Answers

Answered by HariesRam
13

Answer:

முன்னுரை:

"முப்பது கோடி முகமுடையால் -உயிர்

மொய்ப்புற ஒன்றுடையால் " என்ற வரிகள் பாரதியின் தேசிய ஒருமைப்பாட்டை உணர்த்துகிறது .பல்வேறு மதம்,மொழி, இனம், பண்பாட்டு போன்றவற்றை நாம் கொண்டிருந்தாலும் நாம் அனைவரும்

ஒரே தாயின் பிள்ளைகள் என்று உணர்த்துவதே தேசிய ஒருமைப்பாடாகும்.நமக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து ஒரு பாட்டு இருந்தால் நம்மைப்போல் வலிமையுள்ளவர் இவ்வுலகில் யாருமிலர் .இத்தகைய தேசிய ஒருமைப்பாட்டை பற்றி இக்கட்டுரையில்

காண்போம்.

வேற்றுமையில் ஒற்றுமை:

பண்டையகாலத்தில் வேற்றுமைகள் பல இருப்பினும் ஒருமைப்பாட்டை

காணப் பேரரசர்களும் ,சிற்றர்களும் முயன்று வந்துள்ளனர் .மாமன்னர்

அசோகர் நாட்டினிடையே பிணைப்பை உருவாக்கப் பாடுபட்டார் .ஆங்கிலேயர் நம் நாட்டை ஆள முற்பட்ட பின்பு நமக்குள் நாம் முற்பட்டோம் பொருளத்திலும் ,கல்வியிலும் பிணைப்பு உண்டாயிற்று .

நம் இந்திய என்ற உணர்வால் ஆங்கிலேயரை நம் நாட்டை விட்டு விரட்டி

விடுதலை போரில் வெற்றி கண்டோம் .இதற்கு காரணம் நமக்குள்ளே

வேற்றுமைகளை மறந்து நாம் ஒன்றுபட்டது தான் .

பாரதியின் ஒருமைப்பாட்டுணர்வு:

பாரதாயார் தேசிய கவியாக ,மக்கள் கவியாக நம் முன் உலாவருக்கிறார்

"வங்கத்தின் ஓடிவரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்" என்று

"கங்கை நதிப்புறத்து கோதுமைப்பண்டம்

காவிரி வெற்றிலைக்கு மாறி கொள்வோம்,

என்றும் பாரதி கனவு ஒருமைப்பாட்டின் உச்சக்கட்ட என்னமாகும்

அன்றே பாரதி கண்ட கனவை நினவாக்கி நதிகளை இணைத்து நாடு செழிக்க ச் செய்திருந்தால் நாட்டின் எல்லா பகுதிகலும் செழித்து வளர்ந்திருக்கும்

வேண்டத்தக்காதவை:

சாதி, மதம், மொழி, ஆகியவற்றால் இன்றைய இந்தியர்கள் வெறுபட்டிருக்கின்றனர் ,அரசியல் தலைவர்களும் சுயநலபோக்கால் மக்கள் பிளவு பட்டு நிற்கும் நிலை நாட்டின் நிலவுகிறது.தேர்தல் காலத்தில் சாதி, மத, இன, வேண்டத்தக்காதவை என நாம் ஒதுக்கி தள்ளிவிட்டு நமக்குள் நாம் ஒன்றுபட்டு நிற்கவேண்டும்

இன்றைய பாரதம்:

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களும் சுயநல போக்கை மறந்து செயல்பட்டால் மட்டுமே ஒருமைப்பாட்டை உருவாக்க இயலும். "தண்ணீரை பங்கிட்டுவதில் ,மின்சாரத்தை பங்கிட்டுவதில் மாநிலங்அழுகிடையே வேறுபாடு நிலவுவது இன்றைய பாரதத்தின் வளர்ச்சிக்கு வழி கோலாது.ஒவ்வொரு மாநிலமும் மற்ற மாநிலங்களை

மதித்து நட்புறவை வளர்த்து கொண்டால் மட்டுமே வளமான பாரதத்தை

நம்மால் உருவாக்க இயலும் .

மாணவரிடையே ஒருமைப்பாடு:

இன்றைய மக்களிடைமத்தியில் ஒருமைப்பாட்டு நிலவுவதில் குறைப்பது இறந்தாலும் பள்ளி, கலல்லுரிகளில் பயிலும் மாணவர்களுகிடையே ஒருமைப்பாட்டை உருவாக்குவது மிக மிக வேண்டற்பாலதாக்கும் ,ஒரே

மாதிரிரியான கல்வித் திட்டத்தின் மூலமாக ஒருமைப்பாட்டை ஏற்படுத்த

முடியும் .எல்லா மாநிலத்தவர்களும் ஒரே விதமான வாய்ப்புகளும், வசதிகளும் கிடைக்க செய்ய வேண்டும் .மாநிலங்கலுகிடையே மக்கள்

ஒன்று பட்டு வாழி பல்வேறு வழிவகைகளை ஆராய்ந்து செயல்படுத்தினால் ஒருமைப்பாட்டு தானாக வளரும் என்பதில் ஐயமில்லை.

முடிவுரை:

உலக அரங்கில் நாம் வல்லரசாய் உருவாக்க நம்முடைய த்தேவை"தேசிய

ஒருமைப்பாடு "பாரத தாயின் புதல்வர்கள் நாம் என்ற உணர்வை நம்

ரத்த நாலால்களிலும் ஓடவேண்டும் .நம் திறமைகளை எல்லாம் நம்

நாட்டின் வளமைக்கே வைரக்கியத்தோடு நாம் உழைத்தால் வளமை பாரதத்தை நம்மால் உருவாக்க முடியும்.ஒன்றுபடுவோம் ,உயர்ந்தோங்கி

நிற்போம். வாழ்க பாரதம்!!!

Answered by TNGamerFF
0

Explanation:

hi bro you are tamil iam also

Similar questions