India Languages, asked by shrayamythrayep, 9 months ago

Write 5-8 lines on Effects of deforestation in Tamil.

Answers

Answered by Sonalisripathi123
4

Answer:

Deforestation is the clearing, destroying, or otherwise removal of trees through deliberate, natural, or accidental means. It can occur in any area densely populated by trees and other plant life, but the majority of it is currently happening in the Amazon rainforest.

The loss of trees and other vegetation can cause climate change, desertification, soil erosion, fewer crops, flooding, increased greenhouse gases in the atmosphere, and a host of problems for indigenous people.

Explore how protecting forests is one of the top climate solutions with our free Reversing Global Warming online course.

Deforestation occurs for a number of reasons, including farming, with 80% of deforestation resulting from extensive cattle ranching, and logging for materials and development. It has been happening for thousands of years, arguably since man began converting from hunter/gatherer to agricultural based societies, and required larger, unobstructed tracks of land to accommodate cattle, crops, and housing. It was only after the onset of the modern era that it became an epidemic.

Environmental Effects of Deforestation From Above

Loss of Habitat

One of the most dangerous and unsettling effects of deforestation is the loss of animal and plant species due to their loss of habitat. 70% of land animals and plant species live in forests. Not only does deforestation threaten species known to us, but also those unknown.

Answered by amansingh682006
6

Answer:

காட்டு நிலங்களை, வேளாண்மை, நகராக்கம் போன்ற காடல்லாத நிலப் பயன்பாடுகளுக்கோ அல்லது அதன் வளங்களுக்காகக் காட்டை வெட்டி நிலத்தைத் தரிசாகவோ மாற்றுவதே காடழிப்பு என்பதன் முழுமையான பொருளாகும். முற்காலத்தில் காடழிப்பு, மேய்ச்சல் நிலங்களை உருவாக்குவதற்கு அல்லது வேளாண்மை நிலங்களை உருவாக்கும் நோக்கத்துடனேயே நடைபெற்றது. தொழிற் புரட்சிக்குப் பின்னர் நகராக்கமும், காட்டு வளங்களின் சுரண்டலும், இத்துடன் சேர்ந்து கொண்டன. பொதுவாக, குறிப்பிடத்தக்க பரப்பளவு கொண்ட காடுகளை அழிப்பது, உயிரியற் பல்வகைமையைக் (biodiversity) குறைத்து, சூழலையும் தரம் குறைத்து விடுகிறது. வளர்ந்துவரும் நாடுகளில் பெருமளவில் காடழிப்பு இடம்பெற்று வருகிறது. உலக மக்கள் தொகையில் 16 சதவீதம் கொண்டுள்ள ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், மற்றும் வட அமெரிக்க நாடுகள் தொழில்துறையில் பயன்படுத்துகின்ற மரப்பொருடகளில் பாதியை இவை பயன்படுத்துகின்றன.[1] இது புவியியல் மற்றும் காலநிலை சார்ந்த தாக்கங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

போதிய அளவு காடாக்க நடவடிக்கைகள் இன்றி மரங்கள் வெட்டப்படுவதாலேயே தாக்கங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. காடாக்கம் நடைபெற்றாலும் குறிப்பிடத்தக்க அளவு உயிரியற் பல்வகைமைக் குறைவு ஏற்படும். வேண்டுமென்றே செய்யப்படும் காடழிப்பு ஒருபுறம் இருக்க, உணரப்படாமலே, மனிதச் செயற்பாடுகளால், காடழிப்பு இடம்பெறக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எடுத்துக் காட்டாக, காட்டு நிலங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதன் மூலம் புதிய மரக்கன்றுகள் உருவாகாமல் தடுக்கப்படுவதால், இயற்கையான காட்டின் மீளுருவாக்கம் தடைப்பட்டு மெதுவான காடழிப்பு ஏற்படக்கூடும். இவற்றையும் விட இயற்கைச் சீற்றங்களும் காடழிப்புக்குக் காரணிகள் ஆகக் கூடும். திடீரென ஏற்படுகின்ற காட்டுத்தீ, பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள காடுகளைச் சில நாட்களிலேயே அழித்து விடுகின்றன. மேய்ச்சலாலும், காட்டுத் தீயாலும் ஏற்படுகின்ற தாக்கங்களின் கூட்டு விளைவு, வறண்ட பகுதிகளின் காடழிப்புக்கு முதன்மைக் காரணிகளுள் ஒன்றாக இருக்கின்றது.

காடுகள் அழிவதால் ஏற்படுகின்ற நேரடித் தாக்கங்கள் ஒருபுறம் இருக்க, மறைமுகமான தாக்கங்களும் விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்துகின்றன. விளிம்பு விளைவு (edge effects), வாழிடத் துண்டாக்கம் (habitat fragmentation) போன்றவை காடழிப்பின் விளைவுகளை மேலும் பெரிதாக்குகின்றன.

கிழக்கு பொலிவியாவில் காடழிப்புஏற்பட்டதன் செயற்கைக்கோள் புகைப்படம்

காடழிப்பு அல்லது காடு வெட்டுதல் என்பது ஒரு வனத்தையோ அல்லது வரிசையான மரங்களையோ வெட்டி, வெற்றிடம் உருவாக்கி அதை வனமல்லாத பயன்பாட்டிற்கு நிலத்தை கொண்டு வருவதாகவும்.[2] காடழிப்பினால் வனங்கள் பண்ணைகளாகவும் கால்நடை வளர்ப்பு பண்ணைகளாகவும், நகர்ப்புறமாகவும் மாற்றப்படுகின்றன.

2011 ஆம் ஆண்டு உலகின் பாதிக்கும் மேற்பட்ட காடுகள் அழிக்கப்பட்டிருந்தன.[3]வார்ப்புரு:Toc left பெரும்பாலானவை முந்தைய 50 ஆண்டுகளில் அழிக்கபட்டவை ஆகும். உலகின் பாதிக்கும் மேற்பட்ட மழைக்காடுகள் 1990யிலிருந்து அழிந்து கொண்டு வருகின்றன. மேலும் உலகின் பாதிக்கும் மேற்பட்ட விலங்கினங்களும், தாவர இனங்களும் வெப்பமண்டல காடுகளில் வாழ்கின்றன.

காடழிப்பு என்பது ஒரு பகுதியில் உள்ள அனைத்து மரங்களை அகற்றும் நடவடிக்கையை விவரிக்க தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. மிதமான தட்ப வெப்பத்தை உடைய பகுதிகளில் நிலையான வனவியல் நடைமுறைகளுக்கு இணங்க மீளுருவாக்கத்திற்காக அனைத்து மரங்களையும் அகற்றுவது இழப்பு மீட்பு அறுவடை என விவரிக்கபடுகிறது. இடையூறுகள் இல்லாத நிலையில் காட்டின் இயற்கை மீளுருவாக்கம் பெரும்பாலும் ஏற்படாது.[4][5]

காடழிப்பு பல காரணங்களால் ஏற்படும்: மரங்கள் எரிபொருள் பயன்பாடிற்காகவும்(சில நேரங்களில் கரி வடிவில்), விற்பனைக்காகவும் மரத்துண்டுகளுக்காகவும் வெட்டப்படுகின்றன. வெற்றிடங்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம், விளை பொருள் தோட்டங்கள் மற்றும் குடியேற்றங்களாக பயன்படுத்தப்படுகின்றன. காடுகளை மீண்டும் வளர்க்காமல் மரங்களை அகற்றுவது வாழ்விட சேதம், பல்லுயிர் இழப்பு மற்றும் வறண்ட நிலம் முதலியவற்றை ஏற்படுத்தும். இது வளிமண்டல கரியமில வாயுவை நீக்காமல் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். போரில் எதிரி படைகளுக்கு வள ஆதாரங்கள் பயன்படாமல் இருப்பதற்காகபவும் காடுகள் அழிக்கப்படுகின்றன. வியட்நாம் போரின் போது வியட்நாமில் அமெரிக்க இராணுவம் எஜென்ட் ஆரஞ்சு என்ற தாவர கொல்லிகளை பயன்படுத்தியது காடழிப்பிற்கு நவீன எடுத்துக்காட்டு ஆகும். காடழிப்பு ஏற்பட்ட இடங்களில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான மண் அரிப்பு நேர்வதுடன் விளை நிலம் தரிசு நிலமாக தரங்குறைந்து விடுகிறது.

உள்ளார்ந்த மதிப்பை பற்றிய அவமதிப்பு அல்லது அறியாமை, உரிய மதிப்பு இல்லாமை, தளர்வான வன மேலாண்மை மற்றும் குறைபாடுள்ள சுற்றுச்சூழல் சட்டங்கள் போன்றவை பெரிய அளவில் காடழிப்பு ஏற்படுவதற்கு காரணிகளாகும். பல நாடுகளில், இயற்கையாகவும் மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட காடழிப்பு தொடர்ந்து பிரச்சினையாக உள்ளது. காடழிப்பினால் மரபழிவு, காலநிலைமாற்றம், பாலைவனமாக்கல் மற்றும் மக்கள் இடம்பெயர்வு முதலிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. தற்போதைய நிலைமைகளையும் புதைபடிவ பதிவு மூலம் அறிய வரும் பழைய நிலைமைகளையும் உற்று நோக்கும் போது இது விளங்கும்.

Similar questions