India Languages, asked by Shubhangee7838, 8 months ago

சிந்தனைகளின் காலம் மனிதர்களைத் தன்னுணர்வும் அறிவும் உள்ளவர்களாக எப்படி
மாற்றியது?

Answers

Answered by anjalin
2

சிந்தனைகளின் காலம்

  • இப்புவியில், உலகம் மற்றும் பேரண்டம் குறித்து புரிந்துகொள்ளவும், அதைக் குறித்த  அறிவைச் சேகரித்து விளக்கவும் முயற்சி செய்யும் ஒரே உயிரினம் மானுட இனம் மட்டும் தான்.
  • பரிணாம வளர்ச்சிப் போக்கில் மனிதர்கள் உணர்தல் நிலையையும் அறிவாற்றலையும் கொண்டவர்களாக மாறினார்கள்.
  • அவர்கள் இயற்கை, தம்மைச் சுற்றியுள்ள உயிரினங்கள்  மற்றும் உலகம் குறித்துச் சிந்திக்கவும், கேள்வி எழுப்பவும் தொடங்கினர்.
  • முதலில் அவர்கள் இயற்கையைக் கடவுளாகக் கருதினார்கள்.
  • சூரியன், சந்திரன் முதலான பல இயற்கை ஆற்றல்கள் குறித்துத் தமது சுய புரிதல்களை உருவாக்கி வழிபட்டனர்.
  • அவற்றில் சில அறிவியல் பூர்வமானவை அல்ல.
  • அவர்களுடைய பண்டைய எழுத்துகளிலும், சமய இலக்கியங்களிலும் உலகின் தோற்றம்  குறித்த அறிவியல் அறிவின் போதாமை   வெளிப்படுகிறது.
Similar questions