India Languages, asked by veenadsouza6932, 8 months ago

விவசாயம், பானை செய்த ல், உலோகக் கருவிகள் செய்தல் ஆகிய துறைகளில் நிகழ்ந்த வளர்ச்சி
பெருங்கற்காலத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றமாகும் – உறுதிப்படுத்தவும்.

Answers

Answered by anjalin
7

மண்பாண்டங்கள்

  • பெரும்பாலும் தொல்லியல் ஆய்வு நடத்தப்படும் இடத்தில் அதிகமாக மற்றும் முக்கியமான ஆதாரம் மண்பாண்டங்கள் ஆகும்.
  • சங்ககால மக்கள் அதாவது இரும்புக்கால மக்கள் கருப்பு மற்றும் சிகப்பு நிறத்தை மண்பாண்டங்களுக்கு பயன்படுத்தினர்.
  • மண்பாண்டங்கள் உணவு பொருள்கள் வைப்பதற்கும் சமைப்பதற்கும் உணவு உட்கொள்ளுவதற்கும் பயன்படுத்தினர்.
  • இந்த மண்பாண்டங்களின் உள்பகுதி கருப்பாகவும் வெளிப்பகுதி சிகப்பாகவும் காணப்படுகிறது .

உலோக கருவிகள்

  • பெருங்கற்கால மக்கள் உலோகத்தை அதிகமாக பயன்படுத்தியுள்ளனர் என்பது அவர்களது கல்லறையிலே தெரிகிறது.
  • மேலும் அவை இரும்பு பொருள்களில் வைக்கப்பட்டிருந்தன கருவிகளில் வாள், கைக்கோடாரி, முக்காலி, உளிகள், விளக்குகள் போன்றவை பயன்படுத்தப்பட்டன .

வேளாண்மை:

  • இந்த காலத்தில் மக்கள் வேளாண்மை மற்றும் கால்நடைகளை வளத்தனர்.
  • இவர்களது வேளாண்மையில் திணையும் நெல்லும் பயிரிடப்பட்டுள்ளது ஆறுகள் மூலமாக இவர்களது நீர்ப்பாசனம் நடைபெற்றது .
Similar questions