மும்மணிகள் (திரி ரத்னா) என்ற
மூன்று கொள்கைகளை போதித்தவர்
__________.
அ) புத்தர் ஆ) மகாவீரர்
இ) லாவோட்சே ஈ) கன்ஃபூசியஸ்
Answers
Answered by
2
மகாவீரர்
மும்மணிகள் (திரிரத்னா) என்று அழைக்கபடும் சமண மதத்தின் முக்கியமான மூன்று கொள்கைகள்:
- நன்னம்பிக்கை
- நல்லறிவு
- நன்னடத்தை
நன்னம்பிக்கை
- மகாவீரரின் பரிசோதனைகளில், ஞானத்தில் நம்பிக்கை வைத்தல்.
நல்லறிவு
- கடவுள் இல்லை, உலகம் படைத்தவன் - இன்றியே இருந்து வருகிறது, அனைத்துப் பொருட்களுக்கும் ஆன்மா உண்டு என்ற கருத்துகளை ஏற்பது.
நன்னடத்தை
- இது மகாவீரரின் ஐம்பெரும் சூளுரைகளைக் கடைபிடிப்பதைக் குறிப்பது.
அவையாவன -
- எந்த உயிரினத்தையும் துன்புறுத்தலாகாது
- நேர்மையுடன் இருப்பது
- கருணை
- உண்மையுடன் இருப்பது
- பிறருடைய சொத்துக்களுக்கு ஆசைப்படாமல் வாழ்வது.
Similar questions