India Languages, asked by yashpal6104, 8 months ago

கன்பூசியஸின் ஐந்து முக்கியமான
கோட்பாடுகளை விளக்கிக்கூறு.

Answers

Answered by nes29
0

Answer:

கன்பூசியஸின் ஐந்து முக்கியமான கோட்பாடுகளை விளக்கிக்கூறு.

Answered by anjalin
1

கன்பூசியனிசத்தின் ஐந்து முக்கியக் கொள்கைகள்

  1. மனிதத்தன்மை  
  2. நேர்மை  
  3. நன்னடத்தை  
  4. மெய்யறிவு  
  5. நம்பகத்தன்மை
  • மெய்யறிவு குடும்பத்திலிருந்து தான்  வளரும் என்றார் கன்பூசியஸ்.
  • ஓர் ஒழுங்கான  குடும்பத்தின் கட்டுப்பாடுமிக்க தனி நபர்தான் சமூகத்தின் அடித்தளம் என்கிறார்.
  • அவரைப் பொறுத்தவரை மேன்மையான மனிதர் என்பவர் வெறும் அறிவாளியாகவோ, அறிஞராகவோ மட்டும் இல்லாமல், முன்மாதிரியான நடத்தை கொண்டவராகவும் இருக்கவேண்டும்.
  • கன்பூசியசின் மேன்மையான மனிதர் புத்திசாலித்தனம், துணிச்சல், நல்லெண்ணம் ஆகிய மூன்று பண்புகளைக் கொண்டவராவார்.
  • குழந்தைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும், மனைவி கணவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று கன்பூசியஸ் வலியுறுத்தினாலும், ”உத்தரவு தவறென்றால், ஒரு மகன் தனது தந்தையை எதிர்க்க வேண்டும், ஓர் அமைச்சர் அரசரை எதிர்க்க வேண்டும்” என்றும் தெளிவாக  முன்மொழிகிறார்.
  • அரசு குறித்து அவரிடம் கேட்ட  போது, ”ஒரு அரசிற்கு மூன்று விசயங்கள் அவசியமானவை; நாட்டில் போதுமான உணவு, போதுமான இராணுவத் தளவாடங்கள், மக்களுக்குத் தம் ஆட்சியாளர் மீது நம்பிக்கை ஆகியன இருக்க வேண்டும்” என்றார்.
Similar questions