Social Sciences, asked by zaidk1227, 1 year ago

வளிமண்டலத்தில் உள்ள
நுண்ணுயிரிகளைக் கொண்டு,
ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர்
அ) உற்பத்தியாளர்கள்
ஆ) சிதைப்போர்கள்
இ) நுகர்வோர்கள்
ஈ) இவர்களில் யாரும் இல

Answers

Answered by steffiaspinno
0

வளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொண்டு, ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர்.    சிதைப்போர்கள்

  •  சூழ்நிலை மண்டலமானது  மூன்று அடிப்படைக் கூறுகளைக் கொண்டுள்ளது. அவை ,
  • அ) உயிரற்ற கூறுகள்
  • ஆ) உயிருள்ள கூறுகள் மற்றும்
  • இ) ஆற்றல் கூறுகள்
  • இதில்  , உயிருள்ள கூறுகள் என்பது தாவரங்கள் , விலங்கினங்கள் மற்றும் நுண்ணுயிரிகளை கொண்டதாகும். இவை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • அவை  உற்பத்தியாளர்கள்,  நுகர்வோர்கள் மற்றும் சிதைப்போர்கள்  ஆகும்.
  • நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ  உற்பத்தியாளர்களைச் சார்ந்திருக்கும் உயிரினங்களை நுகர்வோர்கள் என்கிறோம்.
  • எனவே , அவை  பிற  உயிரிணங்களை சார்ந்து வாழ்வதால் பிறச்சார்பு  ஊட்டஉயிரி  என்றழைக்கப்படுகின்றன.

சிதைப்போர்கள்      

  • தங்களுக்குத் தேவையானஉணவைத் தாமே தயாரித்துக்  கொள்ள  இயலாத உயிரினங்கள்  இறந்த , அழுகிய  தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக  உட்கொண்டு வாழ்கின்றன. அவை சாறுண்ணிகள்  என்று அழைக்கப்படுகின்றன.
  • பூஞ்சைகள் , காளான்கள்  போன்றவை  சாறுண்ணிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
Similar questions